இந்திய ரயில்வேயில் 9,000 காலியிடங்கள்.. சம்பளம் எவ்வளவு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய ரயில்வேயில் காலியாக 9000 டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் காலியாக 9000 டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்ட நபர்கள் இந்த காலியிடங்களுக்கான தகுதிகள், மற்றும் முக்கிய வழிகாட்டுதல்களை இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கு வரும் 09.0.2024 முதல் 04.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரேடு 1 டெக்னீசியன், கிரேடு 2 டெக்னீசியன் ஆகிய பணிகளுக்கு காலியாக 9,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாகரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
காலியிடங்கள் விவரம் :
டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்) : 1,100 காலியிடங்கள்
டெக்னீசியன் கிரேடு 3 : 7,900 காலிடங்கள்
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை : 9000
கல்வித் தகுதி:
குறிப்பிட்ட டெக்னீஷியன் பதவியைப் பொறுத்து குறைந்தபட்சத் தகுதி மாறுபடும். எனினும் ஐடிஐ சான்றிதழுடன் மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு) முதல் டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்..
வயது எல்லை:
டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் - 18 முதல் 36 ஆண்டுகள்
டெக்னீசியன் தரம் 3 - 18 முதல் 33 ஆண்டுகள்
சம்பளம் :
டெக்னீசியன் கிரேடு 1 : ரூ.29,200
டெக்னீசியன் கிரேடு 3 : ரூ.19,900
விண்ணப்பக்கட்டணம்
பொதுப்பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் ரூ.250 செலுத்த வேண்டும்.
திருச்சியில் வேலை! தேசிய தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளர் பணிக்கு அப்ளை பண்ணுங்க!
RRB 2024 டெக்னீஷியன் காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது
- RRB https://www.recruitmentrrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
- online application link என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்
- முதல் முறையாக விண்ணப்பிக்கும் போது பதிவு செய்யவும் அல்லது கணக்கை உருவாக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்: பதிவு செய்த பிறகு உங்கள் சான்றுகளுடன் உள்நுழையவும். தனிப்பட்ட தகவல்கள், கல்வித் தகுதிகள் போன்ற துல்லியமான விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக நிரப்பவும்.
- ஆவணங்களைப் பதிவேற்றவும்: ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள் போன்ற தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்: கிடைக்கக்கூடிய ஆன்லைன் கட்டண விருப்பங்கள் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- அனைத்து தகவல்களையும் பதிவேற்றிய ஆவணங்களையும் முழுமையாக மதிப்பாய்வு செய்து சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக நீங்கள் ஒரு பிரிண்ட்-அவுட் எடுக்க வேண்டும்
- railway new vacancy 2024
- railway technician new vacancy 2024
- railway technician recruitment 2024
- railway technician vacancy 2024
- rrb alp new vacancy 2024
- rrb alp technician new vacancy 2024
- rrb technician
- rrb technician 2024
- rrb technician new vacancy 2024
- rrb technician notification 2024
- rrb technician qualification
- rrb technician recruitment 2024
- rrb technician syllabus
- rrb technician upcoming vacancy
- rrb technician vacancy
- rrb technician vacancy 2024
- RRB Technician Recruitment