மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம், 2025ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த அடிப்படையிலான 48 கம்பெனி செக்ரட்டரி பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. ரூ.1.20 லட்சம் வரையிலான சம்பளத்தில், இந்தியா முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
செம சான்ஸ், டோன்ஸ் மிஸ்
மத்திய அரசின் முக்கிய பொது துறைகளில் ஒன்றான POWERGRID நிறுவனம், 2025ஆம் ஆண்டுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு, மொத்தம் 48 Company Secretary பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. CC/07/2025 எனும் அறிவிப்பு எண் கீழ் வெளியிடப்பட்ட இந்த வேலைவாய்ப்பு, ஒப்பந்த அடிப்படையில் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ளதால், தகுதியும் திறனும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்படும்
31.12.2025 வரை www.powergrid.in இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். விண்ணப்பிக்கும் முன், அறிவிப்பை முழுமையாகப் படித்து தகுதிகளை சரிபார்க்க வேண்டும் என நிறுவனம் அறிவுறுத்துகிறது. இந்த அறிவிப்பில் உடனடி காலியிடங்கள் 27, மேலும் எதிர்காலத்தில் நிரப்பப்படக்கூடிய 21 காலியிடங்கள் என இரண்டு பிரிவுகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதெல்லாம் கூடுதல் பலம்
Company Secretary பதவிக்கு விண்ணப்பிக்க ICSI Associate Member ஆக இருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருட அனுபவம் நிறுவன செயலாளர் துறையில் இருப்பது கட்டாயம். Board Meetings மற்றும் General Body Meetings நடத்துதல், Minutes மற்றும் Agenda தயாரித்தல், Companies Act தொடர்பான சட்ட நுணுக்கங்களை பின்பற்றுதல் போன்ற செயலாளர் பணிகளில் அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை பெறுவர்.
ரூ.1.20 லட்சம் சம்பளம்
அத்துடன், வயது வரம்பு 29 வருடம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிப்படி SC/ST, OBC, PwBD மற்றும் Ex-Servicemen ஆகியோருக்கு வயது தளர்வு வழங்கப்படுகிறது. சம்பள அளவு Rs. 30,000 – 1,20,000 வரை வழங்கப்படுவதால், இது ஒரு நிலையான மற்றும் உயர்ந்த வெகுமதியூதியம் கொண்ட வேலை வாய்ப்பாகும். தேர்வு முறையில் Screening Test மற்றும் Interview ஆகியவை இடம்பெறும். விண்ணப்பக் கட்டணமாக SC/ST/PwBD/Ex-servicemen விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை; பிறோருக்கு Rs. 400 ஆகும். ஆன்லைன் கட்டண முறையிலேயே செலுத்த முடியும்.
இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள், தங்களின் Email மற்றும் Mobile Number ஆகியவற்றை செயல்பாட்டில் வைத்திருந்து, 31.12.2025க்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். தொழில்நுட்ப திறன், சட்ட அறிவு, நிர்வாக நுணுக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தத் தகுதியான இப்பணியிடங்கள், முன்னேற்றம் தேடும் இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு பொன்னான வாய்ப்பாகும்.


