இனி ஆல் பாஸ் கிடையாது.. 9ம் வகுப்பு தேர்ச்சி பெற இதெல்லாம் கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி..!
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. தற்போது, 8ம் வகுப்பு வரை மட்டுமே அனைவரும் தேர்ச்சி என்ற நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ச்சி பெறுவதற்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் என பள்ளிக்கல்வி துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. தற்போது, 8ம் வகுப்பு வரை மட்டுமே அனைவரும் தேர்ச்சி என்ற நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதால் 10ம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இதனை கருத்தில் கொண்டு 9ம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு சில முக்கிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வி துறை விதித்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- ஒன்பதாம் வகுப்பில் ஒரு மாணவரை தேர்ச்சி அடைய செய்வதற்கு ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சமாக 25 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து குறைந்தது 150 மதிப்பெண் இருக்க வேண்டும். குறிப்பாக மாணவருக்கு 75 சதவீதத்திற்கும் அதிகமான வருகை பதிவு இருக்க வேண்டும்.
ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவர் இறுதி தேர்வில் ஒரு பாடத்தில் அல்லது அனைத்து தேர்விற்கும் வரவில்லை என்றால் அந்த மாணவர் அதற்கான மருத்துவச் சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்தால் காலாண்டு அல்லது அரையாண்டு மதிப்பெண்ணை எடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.