நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் 550 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புகிறது. பட்டதாரிகள் ஆகஸ்ட் 30, 2025 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.

பொதுத்துறை காப்பீடு நிறுவனமான தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 550 நிர்வாக அதிகாரி (Administrative Officer - Scale-I) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பு மற்றும் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் விவரம்:

மொத்தம் 550 பணியிடங்கள் உள்ளன. அவற்றில்,

* பொது (Generalists) - 193

* ரிஸ்க் இன்ஜினியர் - 50

* ஆட்டோமொபைல் இன்ஜினியர் - 75

* சட்ட நிபுணர்கள் - 50

* அக்கவுண்ட்ஸ் நிபுணர்கள் - 25

* AO சுகாதாரம் - 50

* ஐடி நிபுணர்கள் - 25

* வணிக ஆய்வாளர் (Business Analyst) - 75

* நிறுவன செயலாளர் (Company Secretary) - 2

* காப்பீட்டு நிபுணர் (Actuarial) - 5

வயது வரம்பு:

01.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி:

பொதுப் பிரிவுக்கு: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (SC/ST/மாற்றுத்திறனாளிகளுக்கு 55%).

நிபுணர் பணியிடங்களுக்கு: அந்தந்த துறை சார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (உதாரணமாக, ஆட்டோமொபைல் இன்ஜினியர் பதவிக்கு ஆட்டோமொபைல் பிரிவில் B.E./B.Tech/M.E/M.Tech அல்லது அதற்கு இணையான தகுதியும், சட்ட நிபுணர் பதவிக்கு சட்டத்தில் இளங்கலை/முதுகலை பட்டமும் தேவை).

சம்பளம் மற்றும் தேர்வு முறை:

இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். அடிப்படை சம்பளம் ரூ.50,925.

மூன்று கட்டங்களாகத் தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கும், அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கும் அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

கடைசி நாள்: இந்த வேலைவாய்ப்புக்கு ஆகஸ்ட் 30, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.850. SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.

விண்ணப்பிப்பதற்கான இணையதளம்: https://www.newindia.co.in/recruitment/list,https://www.newindia.co.in/recruitment/list

முக்கிய தேதிகள்:

* விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2025

* முதல்நிலைத் தேர்வு: 14.09.2025

* முதன்மைத் தேர்வு: 29.10.2025

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில், சேலம், திருச்சி உட்பட பல முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் தகவல்களை, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.