NEET Result : மாணவர்களே அலெர்ட்.. நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது தெரியுமா ?

நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு நடைபெற்றது.

NEET UG Result 2022 Check Latest Update on NEET Answer Key Result date

நீட் தேர்வுக்கு வயது தடையில்லை என்பதாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாலும், நீட் தேர்வர்கள் நம்பிக்கையின்மை உட்பட பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு நடைபெற்றது. மொத்தம் 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 

NEET UG Result 2022 Check Latest Update on NEET Answer Key Result date

மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிடித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 95% பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் உத்தேச விடைகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ உத்தேச விடைக் குறிப்பு இன்று அல்லது நாளைக்குள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !

NEET UG Result 2022 Check Latest Update on NEET Answer Key Result date

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு நீட் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  கேள்விகள் பெரும்பாலும் என்சிஇஆர்டி பாடப் புத்தகத்தை மையமாகக் கொண்டிருந்தன என்றும் கூறப்பட்டது.  எனவே, இந்தாண்டு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. neet.nta.nic.in என்ற இணையத்தளம் மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..MS Office தெரிந்தால் போதும்.. உங்களுக்கு காத்திருக்கிறது தமிழக அரசு வேலை..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios