NEET UG 2022 : நாளை முதல் நீட்த்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பெறலாம்.. இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்வது எப்படி..
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு, வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு, வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வானது இந்தாண்டு வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும் படிக்க:NEET UG 2022 : நீட் தேர்வு அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி..? முழு விபரம்..
அதன்படி, நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி இளங்கலை மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைத்தேர்வு ( நீட்) நடைபெறவுள்ளது.நீட் 2022 தேர்வினை எழுத இந்த ஆண்டு 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நீட் தேர்வு தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறுகிறது. மேலும் இந்த நுழைவுத்தேர்வானது
மேலும் படிக்க:கவனத்திற்கு !! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்..
3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும். இத்தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். இந்தியாவில் சுமார் 543 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடக்கவுள்ளது. சமீபத்தில் நீட் தேர்வுக்கான நகர அறிவிப்பு சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. NEET UG 2022 - க்கான நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.