நீட் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய வழிமுறைகள் ; இவற்றுக்கெல்லாம் அனுமதி கிடையாது ?
மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் (NEET) நுழைவு தேர்வு ஜூலை 17 நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர NEET நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நீட் நுழைவு தேர்வு ஜூலை 17, நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நேற்று முன்தினம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
விண்ணப்பம் செய்த தேர்வர்கள் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியாத தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தேசிய தேர்வு முகமையின் அவசர உதவி எண்களில் தொடர்புகொள்ளலாம். neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..இது ஆன்மீக ஆட்சியா? திராவிட மாடல் ஆட்சியா ? கடுப்பான தர்மபுரி எம்.பி - வைரல் வீடியோ!
அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் (பெயர், புகைப்படம்) சரியானதாக என்று கவனமுடன் சரி பார்க்க வேண்டும். ஏதேனும், தவறு இருந்தால், உதவி எண்களின் மூலம் தேசிய தேர்வு முகமைக்கு தெரிவிக்க வேண்டும். இருப்பினும், அத்தகைய தேர்வர்கள், தாங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டின் அடிப்படையில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வர்கள் அனுமதிச் சீட்டை தேர்வு கூடத்திற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாத மாணவர்கள் தேர்வெழுத கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தின் தேர்வு கூடத்தில் தான் தேர்வெழுத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வருகை தாளில் ஒட்டுவதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு..ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை - கடுப்பான எடப்பாடி பழனிசாமி !
நீட் நுழைவுச் சீட்டில் மற்றொரு புகைப்படம் ஒட்டப்பட வேண்டும். பான் கார்டு / டிரைவிங் லைசென்ஸ் / வாக்காளர் ஐடி / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை (புகைப்படத்துடன்) / ரேஷன் கார்டு அல்லது வேறு ஏதேனும் அரசாங்க ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும். சரிபார்ப்பிற்காக இது தேவைப்படும். மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் தளர்வு கோரும் விண்ணப்பதாரர்கள் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட PwD சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
மேலும் தேர்வு அறைக்குள் மொபைல் போன்கள், கால்குலேட்டர்கள், புளூடூத், இயர்போன்கள், மைக்ரோஃபோன்கள், பேஜர் அல்லது ஹெல்த் பேண்ட் போன்ற எந்த தொடர்பு சாதனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..மம்தாவின் எதிரி டூ பாஜக வேட்பாளர் ; யார் இந்த ஜெகதீப் தங்கர் ? முழு தகவல்கள் இதோ !