10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை.. கட்டணம் எதுவும் கிடையாது !
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய வானொலி வானியற்பியல் மையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
ரேடியோ வானியற்பியல் தேசிய மையம் (NCRA புனே)
பதவி விவரங்கள் : பணி உதவியாளர், நிர்வாக அதிகாரி
மொத்த பதவிகளின் எண்ணிக்கை : 43
சம்பளம் : விதிமுறைகளின்படி
வேலை இடம் : ஊட்டி - தமிழ்நாடு, புனே, கோதாட் - மகாராஷ்டிரா
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் : ncra.tifr.res.in
மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !
பொறியாளர், நிர்வாக அதிகாரி, நிர்வாக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், எழுத்தர், ஆய்வக உதவியாளர், திட்டப் பொறியாளர் என 43 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். விண்ணப்பதாரர் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம், பிஎஸ்சி, பி.காம், பிஇ/ பி.டெக், பட்டப்படிப்பு, எம்இ/ எம்.டெக், முதுகலை பட்டப்படிப்பை ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் தகுதிகளை அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ வலைத்தளமான @ ncra.tifr.res.in இணையத்தளத்தில் வேலைவாய்ப்பு பற்றி முழுதாக தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. அதேபோல விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.26,946/- முதல் அதிகபட்சம் ரூ.1,18,645/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!