மத்திய அரசு பணி.. பொறியியல் படித்தவர்கள் முதல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்..முழு விவரம்
ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தில் (NCRA) காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனே , கோதாட் மற்றும் தமிழகத்தில் ஊட்டியில் காலி பணியிடங்கள் உள்ளன.

காலி பணியிடங்கள்:
மொத்தம் 43 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதிவு:
கடந்த 2 ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு இன்று மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
பதவிகள்:
Administrative Officer, Engineer ,Administrative Assistant உள்ளிட்ட 18 பதவிகளுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க:சூப்பர் அறிவிப்பு.. ஜிப்மர் மருத்துவமனையில் மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..?
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் 28 வயது முதல் 43 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு, திறனறிவு தேர்வு , நேர்காணல் உள்ளிட்ட முறைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கல்வித் தகுதி மற்றும் பணியிட விவரம்:
விண்ணப்பிக்கும் பதவிகளுக்கு ஏற்ற வகையில் கல்வி தகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஊட்டி (தமிழ்நாடு ) , புனே, கோதாட் (மகாராஷ்டிரா) ஆகிய இடங்களில் பணிகள் காலியாக உள்ளது.
மேலும் படிக்க:தென் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி ..? முழு விவரம்..
விண்ணப்பிக்கும் முறை:
https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளம் மூலம் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்க செய்ய வேண்டும். பின்னர் அறிவிப்பினை நன்றாக படித்த பிறகு விண்ணப்பிக்க விருப்பம் உடைய வேலைக்கு கல்வித் தகுதி இருந்தால் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். http://49.248.152.155/ADVT/Forms/AppForm.aspx இந்த லிங்க் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம்.