டிகிரி அவசியம்.. 70 ஆயிரம் வரை சம்பளம்.. 100 % வேலை நிச்சயம் - மிஸ் பண்ணிடாதீங்க !!
மாணவ / மாணவியருக்கு இலவசமாக தாட்கோ மூலம் Medical Coding Training பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளங்கலை அறிவியல் (Life Science) முடித்த மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு இலவசமாக Medical Coding Training குறுகிய கால பயிற்சியாக அளித்து பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை அரசு நிறுவனமான தாட்கோ அறிவித்துள்ளது. இது பற்றிய தாட்கோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இளநிலை அறிவியல் லைப் சயின்ஸ் பட்ட முடித்த மாணவர்களுக்கு மருத்துவ குறியீடு சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றது. இதன் மூலமாக மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலமாக இணையதளம் வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு பயிற்சிக்கான கட்டணம் தொகையாக ரூபாய் 15 ஆயிரத்தை தாட்கோ நிறுவனமே வழங்குகின்றது. இந்த பயிற்சி முடிந்தவுடன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் செய்திகளுக்கு..38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !
மேலும் இந்த பயிற்சியில் சேர்ந்து மாணவர்களுக்கு நேர்முக தேர்வு மூலமாக 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு இணையதளத்தை பார்வையிடலாம். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ12,000/- முதல் ரூ,15,000/-வரை பெறலாம் எனவும், பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ,50,000/- முதல் ரூ.70,000/-வரை பதவி உயர்வின் அடிப்படையில் குறுகிய காலத்தில் மாத ஊதியமாக பெறலாம்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !