Asianet News TamilAsianet News Tamil

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை! 8வது பாஸ் செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் டிரைவர் பணியில் சேர முடியும். 62 ஆயிரம் வரை மாதச்சம்பளம் கிடைக்கும்.

Madukkarai Panchayat Union Coimbatore - Jeep Driver Post Vacancy Recruitment Notification 2023 sgb
Author
First Published Sep 27, 2023, 1:02 PM IST | Last Updated Sep 27, 2023, 1:08 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் காலியாக உள்ள ஜீப்  ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலையில் ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இனசுழற்சி அடிப்படையில் ஆதிதிராவிடர் (அருந்ததியினருக்கு முன்னுரிமை) இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு, கல்வித்தகுதி:

01.07.2023 அன்று 18 வயது நிறைவு அடைந்தவராக இருத்தல் வேண்டும். இதேபோல 01.07.2023 அன்று 42 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பது எதிர்பார்க்கப்படுகிறது.

மாதம் ரூ.37 ஆயிரம்! பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

சம்பளம்:

எட்டாம் நிலை (Level-8) ஊழியர்களுக்கான ஊதியமாக ரூ.19500 முதல் ரூ.62000 வரை அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்ப சம்பளம் கிடைக்கும். இதர படிகளும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆணையாளா், ஊராட்சி ஒன்றியம், மதுக்கரை என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது நேரில் சமர்ப்பிக்கலாம். 09.10.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் அலுவலகத்தை வந்தடைய வேண்டும். https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் இருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம். அதை பிரிண்ட் அவுட் எடுத்து பூா்த்தி செய்து அனுப்பவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2023 (மாலை 5.45 மணிக்குள்)

ஏசியாநெட் தமிழ் செய்திகளை WhatsApp Channel-ல் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios