மாதம் ரூ.71,900 சம்பளத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - 1412 காலியிடங்கள் !
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff / Process Server, Process Writer, Xerox operator, lift Operator மற்றும் Driver ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1412 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
மேலும் Driver பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், Driving License வைத்திருப்பவராகவும் இருப்பது அவசியமானது ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !
அதேபோல SC / ST – 05 ஆண்டுகள் மற்றும் MBC / DC / BC – 02 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். ப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 1412 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022 ஆகும். விண்ணப்பதாரர்கள் ரூ.550/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST பிரிவினர், விதவைகள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!