எல்ஐசி பீமா சகி திட்டத்தின் மூலம் பெண்கள் வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.7,000 வரை சம்பாதிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 - 70 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
பெண்கள் தங்களுக்கென தனியாக வருமானம் சம்பாதிக்க ஒரு சிறந்த வாய்ப்பை எல்ஐசி (லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) தெரிவித்துள்ளது. 'எல்ஐசி பீமா சகி திட்டம் (Bima Sakhi Yojana)' எனும் இந்த புதிய முயற்சி, பெண்களை எல்ஐசி (LIC) முகவர்களாக மாற்றி, வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வழிவகுக்கிறது.
மாதம் ரூ.7,000 உதவித்தொகை
இந்த திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு முதல் மூன்று ஆண்டுகள் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். முதல் ஆண்டு மாதம் ரூ.7,000 வரை நிலையான தொகை கிடைக்கும். இது அவர்களின் செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டத்தின் நோக்கம்
பெண்கள் சுயதிறன் பெற்றுவாழ் உதவுவது தான் இந்த திட்டத்தின் இலக்கு. பெண்கள் எல்ஐசி முகவர்களாக நியமிக்கப்பட்டு, இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வையும் பரப்ப வேண்டும். இதற்கான பயிற்சி, ஊக்கத்தொகை ஆகியவை திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
தற்போதைய எல்ஐசி முகவர்கள், எல்ஐசி நிறுவன ஊழியர்களின் குடும்பத்தினர் (கணவர், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள், மாமா, மாமி போன்ற நேரடி உறவுகள்), கடந்த காலத்தில் LIC-ல் வேலை பார்த்தவர்கள் அல்லது முன்னாள் முகவர்கள் போன்றவர்கள் இந்த திட்டத்தில் பங்கு பெற முடியாதவர்கள் ஆவார்கள்.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்
- விண்ணப்பதாரி குறைந்தது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது 18 முதல் 70 வரை இருக்க வேண்டும். (கடைசி பிறந்தநாளின் அடிப்படையில் கணக்கிடப்படும்).
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
- கல்வித்தகுதி சான்று
- முகவரி மற்றும் பிறந்த தேதி நிரூபணம் (சுய சான்றளிக்கப்பட்ட நகல்)
வீட்டிலிருந்தபடியே வேலை
இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் வீட்டிலிருந்தபடியே LIC-க்கு தேவையான பணிகளை செய்யலாம் தங்களுக்கே உரிய நேரத்தில் வேலை செய்து வருமானம் சம்பாதிக்கலாம். சமூகத்தில் ஒரு பொருளாதார சுதந்திரம் பெறலாம் இந்த Bima Sakhi திட்டம் ஊக்கத்துடன் செயல்படும் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு ஆகும்.
சுயமாக சம்பாதிக்க, எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க இந்த திட்டம் ஒரு நம்பிக்கையான படியாக அமைகிறது. இது வெறும் தகவல் நோக்கத்திற்கே, விருப்பமிருந்தால் உங்கள் அருகிலுள்ள LIC கிளையிலோ அல்லது அதிகாரப்பூர்வ தளத்தில் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள் கொள்ளலாம்.
