தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 61 அரசு உதவி வழக்கு நடத்துநர் (Grade-II) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. சட்டப் பட்டம் (B.L.) மற்றும் 5 வருட வழக்கறிஞர் அனுபவம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சட்டம் தெரியுமா?! அப்ப நீங்கதான் சட்டநாதன்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குற்றவழக்கு தொடர்வு துறையின் Assistant Public Prosecutor Grade-II (அரசு உதவி வழக்கு நடத்துநர்) பதவிகளை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 61 பணியிடங்கள் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டத்துறையில் தங்கள் கரியரை உருவாக்க நினைக்கும், வழக்கறிஞர் அனுபவம் கொண்டவர்களுக்கு இது முக்கியமான வாய்ப்பாகும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம், மேலும் கடைசி தேதி 31 டிசம்பர் 2025 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

B.L., Degree இருக்கா அப்போ ஜாலிதான்

இந்தப் பணிக்கு B.L., Degree பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 5 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் அவசியம். சம்பள நிலை Pay Level-22 ஆகும். வயதிலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவினர் 36 வயதிற்குள், MBC/BC/BCM பிரிவினர் 34 வயதிற்கு வரை விண்ணப்பிக்கலாம். SC/SC(A)/ST பிரிவினருக்கு வயது வரம்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முறை மூன்று அடிநிலைகளில் நடைபெறும்

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, பின்னர் நேர்முகத் தேர்வு. முதல்நிலைத் தேர்வில் 2 தாள்கள் இடம்பெறும். முதல் தாளில் தமிழ், பொது அறிவு, திறனறிவு கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் முழுக்க சட்டம் தொடர்பான 200 வினாக்கள் வழங்கப்படும். இரண்டு தாள்களுக்கும் 3 மணி நேரம் நேரம் வழங்கப்படும். முதன்மைத் தேர்வில் 5 தாள்கள் எழுத வேண்டி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.150 (ஏற்கனவே நிரந்தர பதிவு இருந்தால் தேவையில்லை). தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப செய்த பின் அதன் பிரதியை சேமித்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. சட்டத்துறையில் அரசு பணிக்கான சிறந்த வாய்ப்பு விரும்புவோர் இந்த அறிவிப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!