தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டுவரும் பல் மருத்துவ மையங்களில் காலிபணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டுவரும் பல் மருத்துவ மையங்களில் காலிபணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. Dental Surgeon பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு செப்டம்பர் 03 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பணி விவரங்கள்:

நிறுவனம் பெயர்:

  • அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

பதவி பெயர்:

  • Dental Surgeon

காலி பணியிட எண்ணிக்கை: 1

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 

  • 03/09/2022

விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விரைவு அஞ்சல் முறையில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) துனை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,

நாகப்பட்டினம் மாவட்டம்.

ஊதியம்:

  • ரூ.26,000

கல்வித் தகுதி:

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் BDS படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் சான்றிதழ் பதிவு செய்து இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ தளம்:

https://www.nagapattinam.nic.in/

நிபந்தனைகள்:

  • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under talking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) துனை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,

நாகப்பட்டினம் மாவட்டம்.

  • விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
  • விண்ணப்ப படிவங்கள் மாவட்ட துணை சுகாதார இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
  • மின்னஞ்சல் (E-Mail ID) dphngp@nic.in
  • மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.