இந்திய அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு... 3,167 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்து 167 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

job vacancy in indian postal department

இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்து 167 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி: 

  • கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) 

காலிப்பணியிடங்கள்: 

  • மொத்தம்: 40,899 பணியிடங்கள்
  • தமிழ்நாடு: 3,167 பணியிடங்கள்

தேர்வு செய்யும் முறை: 

  • இந்தக் காலிபணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் கணினி உருவாக்கும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுபவர்கள். 
  • பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். 

இதையும் படிங்க: தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலை!. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரம் இதோ !!

பணிக்கான தகுதிகள்:

  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். 
  • இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
  • வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

வயதுவரம்பு:

  • விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி? 

  • www.indianpost.gov.in / https://indiapostgdsonline.gov.in - என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று Registration என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து தனிப்பட்ட பதிவு எண்ணைப்பெற வேண்டும்.
  • பின்னர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். 
  • ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகையை எடுத்துக்கொண்ட பின் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் பதிலுக்காக 72 மணிநேரம் வரை காத்திருக்கலாம். 
  • எல்லா தலைமை தபால் அலுவலகத்திலும் நேரடியாக பணம் செலுத்தலாம்.
  • ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை நிரப்பவும். பின் ஆவணங்களைப் பதிவேற்றவும். பின்னர் அஞ்சல் அலுவலக விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும்.உங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து விட்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். 

இதையும் படிங்க: ஆவின் நிறுவனத்தில் 322 காலிப் பணியிடங்கள்.. இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும்.. தமிழக அரசு முடிவு.!

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

 கடைசி நாள்: 

  • 16.02.2023 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios