Asianet News TamilAsianet News Tamil

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job vacancy in indian post and here the details how to apply
Author
First Published Jan 8, 2023, 11:28 PM IST

இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

பதவிகள்:

  • M.V.Mechanic(Skilled)
  • M.V.Electrician(Skilled) 
  • Copper and Tinsmith (Skilled) 
  • Upholster(Skilled)

காலிப்பணியிடங்கள்: 

  • M.V.Mechanic(Skilled) - 04
  • M.V.Electrician(Skilled) - 01 
  • Copper and Tinsmith (Skilled) - 01 
  • Upholster(Skilled) - 01 

மொத்தம்: 07

இதையும் படிங்க: நாங்க காங்கிரஸ் மாதிரி இல்லை... மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து!!

கல்வித் தகுதி:

  • இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்கல்வி மையத்தில் சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இல்லையேல், எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
  • எம்.வி.மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிப்போர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

 சம்பள விவரம்:

  • ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை / மாதம் 

வயது வரம்பு:

  • 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் வயது 30-க்குள் இருக்க வேண்டும். 
  • வயதுவரம்பில் சலுகை கோரும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

  • டிரேட் டெஸ்ட் (Trade Test) மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் பிப்.12 அன்று ஆர்பார்ட்டம்... அறிவித்தது ஜாக்டோ ஜியோ அமைப்பு!!

தேர்வு நடைபெறும் தேதி:

  • தேர்வு நடைபெறும் தேதி, இடம், நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

  • https://www.indiapost.gov.in-இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். 
  • அதோடு தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சென்னை அலுவலக அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

முகவரி: 

மூத்த மேலாளர், 
அஞ்சல் ஊர்தி சேவை,
எண்.37, கிரீம்ஸ் சாலை, 
சென்னை - 600 006 

கடைசி நாள்: 

  • 09.1.2023
Follow Us:
Download App:
  • android
  • ios