அரசு நூலகத்தில் வேலைவாய்ப்பு... நேரடி நியமனம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த நூலக பணிகள் / சாரிநிலைப் பணிகளில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job vacancy in govt library and here the details about how to apply

தமிழ்நாடு ஒருங்கிணைந்த நூலக பணிகள் / சாரிநிலைப் பணிகளில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

நேர்முகத் தேர்விற்கான பதவிகள்:

  • கல்லூரி நூலகர் 
  • நூலகர் மற்றும் தகவல் அலுவலர் 
  • மாவட்ட நூலக அலுவலர் 

நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்

  • நூலக உதவியாளர் 
  • நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை - II 

காலிப்பணியிடங்கள்: 

  • கல்லூரி நூலகர் -8
  • நூலகர் மற்றும் தகவல் அலுவலர் - 1
  • மாவட்ட நூலக அலுவலர் - 3
  • நூலக உதவியாளர் -2
  • நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை - II - 22

மொத்தம் - 36

இதையும் படிங்க: நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல சென்ற நபர் காட்டெருமை முட்டி பலி

கல்வித் தகுதி: 

  • கல்லூரி நூலகர் பணிக்கு நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • இதே துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
  • நூலகர் மற்றும் தகவல் அலுவலர், மாவட்ட நூலக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • நூலகர் பணியில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.  மாவட்ட நூலக அலுவலர் பணியிடத்திற்கு மூன்றாண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பிக்க நூலக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

  • பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு  உச்ச வயது வரம்பு இல்லை. 
  • நேர்முகத் தேர்வு உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏனையோர்க்கு அதிகபட்ச வயதுவரம்பு 37 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
  • கல்லூரி நூலகர் பணிக்கு ஏனையோர் 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
  • நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு விண்னப்பிக்க ஏனையோர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

  • கல்லூரி நூலகர் - மாதம் ரூ.57,700 முதல் ரூ. 2,11,500  வரை ஊதியமாக வழங்கப்படும். 
  • நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (அண்ணா நூற்றாண்டு நூலகம்) -  மாதம் ரூ.56,100 முதல் ரூ. 2,05,700  வரை ஊதியமாக வழங்கப்படும். 
  • மாவட்ட நூலக அலுவலர் - மாதம் ரூ.56,100 முதல் ரூ. 2,05,700  வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • நூலக உதவியாளர் - மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,30,400  வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை - மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900  வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: 

  • நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150
  • நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு - ரூ.200
  • நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு மட்டும் - ரூ.100

இதையும் படிங்க: இன்றைய நிதிநிலை அறிக்கை தமிழர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்; முதல்வர் கருத்து

எழுத்துத் தேர்வு மையங்கள்:

  • இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, கணினி வழி தேர்வு ,நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • www.tnpscexams.in / www.tnpsc.gov.in- ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 

  • 01.02.2023
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios