மத்திய அரசின் EPFO-ல் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் உள்ளே!!
மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் (EPFO)-வில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் (EPFO)-வில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பதவி:
- அமலாக்க அதிகாரி (Enforcement Officer / Accounts Officer)
- உதவி நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner)
காலிப்பணியிடங்கள்:
- அமலாக்க அதிகாரி – 418
- உதவி நிதி ஆணையர் - 159
மொத்தம் - 577
இதையும் படிங்க: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
அமலாக்க அதிகாரி (Enforcement Officer / Accounts Officer):
சம்பளம்:
- 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
- ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner):
சம்பளம்:
- 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
- ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- company Law, Labour Law, public Administration பாடங்களில் டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை:
- எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதையும் படிங்க: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு... ரூ.25,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
விண்ணப்பக் கட்டணம்:
- ரூ.25. இதனை எஸ்பிஐ வங்கி ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
- www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:
- 17.03.2023