வேலூர் சிறையில் எழுத, படிக்கதெரிந்தவர்களுக்கு ரூ.50,000ல் வேலை
வேலூர் மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள்சேர்க்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மத்திய சிறையில் காலியாக உள்ள முடி திருத்துநர் மற்றும் சிறை காவலர் பயிற்சிப் பள்ளியில் காலியாக உள்ள இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி இருந்தாலே போதும்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் வேலைவாய்ப்பு அறிவிப்பு !
வேலூர் மத்திய சிறையில் நடத்தப்படும் இத்தேர்வில் முடிதிருத்துநர், இரவு காவலர் ஆகிய இரு பணிகளுக்கும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். செயல்முறை தேர்வு, எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி?
பொதுப்பிரிவினர் 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் 34 வயது வரையும், பட்டியலின மக்கள், பட்டியலின அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் 18 வயது முதல் 37 வயது வரையும் இருக்க வேண்டும். ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் சாதி சான்று, வயது வரம்பு சான்று, கல்வி சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை இணைத்து தபால் மூலம் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, வேலுர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.