Asianet News TamilAsianet News Tamil

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய தேசிய நெடுஞ்சாலை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job vacancy in national highways authority of india and here the details about how to apply
Author
First Published Dec 11, 2022, 7:05 PM IST

இந்திய தேசிய நெடுஞ்சாலை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மேலாளர் (நிர்வாகம்), உதவி மேலாளர் (சட்டம்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

பதவிகள்: 

  • மேலாளர் (நிர்வாகம்) - 12 காலிப்பணியிடங்கள்
  • மேலாளர் (சட்டம்) – 2 காலிப்பணியிடங்கள்
  • உதவி மேலாளர் (சட்டம்) - 4 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

  • இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க: பொய் வாக்குறுதி.. குறுக்கு வழி அரசியல்வாதிகளிடம் உஷாராக இருங்கள்.! எதிர்கட்சிகளை அதிரவைத்த பிரதமர் மோடி

பணி காலம்:

  • இந்த வேலைவாய்ப்பு deputation பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலானது. இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மூன்றாண்டுகள் வரை பணிக்காலம், திறன் அடிப்படையிலும், நிரந்தர பணிக்கான தேவையின் அடிப்படையிலும் ஒப்பந்தகாலம் நீடிக்கப்படும்.

ஊதிய விவரம்:

  • மேலாளர்(நிர்வாகம்) பணி - ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை/ மாதம்
  • மேலாளர் (சட்டம்) பணி -  ரூ. 15,600 முதல் ரூ.39,100 வரை/ மாதம்
  • உதவி மேலாளர் பணி -  ரூ.9,300 முதல் ரூ. 34,800 வரை/ மாதம்

வயது வரம்பு:

  •  இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:  2022 இந்தியாவின் நூற்றாண்டு.. வென்சர் கேப்பிடலிஸ்ட் பிரெண்டன் ரோஜர்ஸ் கணிப்பு !

தேர்வு செய்யப்படும் முறை:

  • மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

  • https://www.nhai.gov.in -என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 

  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜன.19, 2023 மாலை 6 மணி வரை
Follow Us:
Download App:
  • android
  • ios