அடி தூள்.. நீதி மன்றங்களில் வேலை வாய்ப்பு.. உடனே இதை படியுங்கள்..
தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் Examiner, Reader, Senior bailiff, junior Bailiff, pricess writter, driver, lift operator போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்காக விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24-7- 2022 முதல் 22 -8-2022 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்ணப்பங்கள் இணைய தளத்தின் மூலம் இணைப்பதற்கு பல படிநிலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு:-
1. இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் விண்ணப்பதாரர்கள் பொதுவாக என்னென்ன செய்யவேண்டும் அவர்களுக்கான அறிகுறிகள் இணையதளத்தில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை முழுமையாக படித்துப் பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. லேண்டிங் பக்கத்தில் click here to apply என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிக்கை 1 , அறிவிக்கை 2 என வரும் அதில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய அறிவிக்கையை தேர்வு செய்ய வேண்டும்.
2. அறிவிக்கை 1 அல்லது அறவிக்கை 2 கிளிக் செய்தவுடன் கீழ்கண்டவாறு பக்கம் தோன்றும். பின்னர் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க வேண்டிய நீதித்துறை மாவட்டத்தை தேர்வு செய்ய வேண்டும், மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் ஏனென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் புதிய பயனர்கள் 'registration new uses' என்பதை கிளிக் செய்ய வேண்டும். அல்லது இதற்கு முன் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் already registered candidate என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள்: நீங்க 10 வது தான் படிச்சிருக்கீங்களா?...கவலையை விடுங்க.. உங்களுக்கான அரசு வேலை வாய்ப்பு இதோ!
புதிதாக பதிவு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் என பதிவு படிவம் திரையில் தோன்றும் விண்ணப்பதாரர்கள் தங்கள் அடிப்படை தகவல்களை படிவத்தில் பதிவு செய்ய வேண்டும், அதில் ஆதார், பாலினம், மின்னஞ்சல், அலைபேசி போன்ற அனைத்து விவரங்களையும் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பதாரரின் ஐடி மற்றும் கடவுச்சொல் அதில் உருவாகும், எனவே விண்ணப்பதாரர்கள் ஐடி கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பப் படிவத்தில் உள்நுழைய வேண்டும். அதேபோல் விண்ணப்பதாரர்கள் தங்களது தகவல்களை பதிவு செய்தவுடன் அனைத்து தரப்பினரும் 60 ரூபாய் பொருந்தக்கூடிய வரிகள் செலுத்தினால் மட்டுமே அந்த பதிவு நிறைவடையும்.
இதையும் படியுங்கள்: மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. TNPSC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு - முழு தகவல்கள் இதோ !
அந்த பதிவு கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்பதாரர்கள் விரிவான படிவத்திற்கு செல்லமுடியும், அதில் அவர்கள் ஏற்கனவே பதிவிட்ட அவர்களது ஆதார் எண், தொலைபேசி, பெயர் உள்ளிட்ட விவரங்கள் திருத்த முடியாத பகுதியாக இருக்கும். இதில் முக்கிய தகவல் என்னவென்றால் அப்படிவத்தில் விண்ணப்பதாரர்கள் சிவப்பு நட்சத்திரம் குறிப்பிட்ட அனைத்து பகுதிகளையும் நிரப்ப வேண்டும். அந்தப் படிவத்தில் இடம்பெற்றிருக்கும் பகுதி
1 சுயவிவரங்கள்
2. கல்வி, தொழில்நுட்ப தகுதிகள்
3. கூடுதல் விவரங்கள்
4. புகைப்படத்தை பதிவேற்றம் செய்க
5. கையொப்பத்தை பதிவேற்றம் செய்க
6. சான்றிதழ்களை பதிவேற்றம் செய்க, உறுதி மொழியை, கட்டண பிரிவு, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தல் போன்ற பகுதிகள் இடம் பெற்றிருக்கும்.
சுயவிவரங்கள்...
விண்ணப்பிப்பவர்கள் தனது பூர்வாகம், பாலினம் உள்ளிட்ட சுயவிவரத்தை அதில் பதிவிட வேண்டும். பாலினத்தை அவர்கள் செலக்ட் செய்த பின்னர் பாலின பெட்டி தோன்றும் அதில் அவரது பாலினத்தை பதிவிட வேண்டாம், பின்னர் OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் நிரந்தர முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி போன்றவற்றை அதில் பதிவிட வேண்டும், அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழ் உள்ளதா என கேள்வி கேட்கும், அப்போது ஆம் என்று பட்டனை கிளிக் செய்தால் அதில் சாதிகளின் பட்டியல் இடம் பெற்றிருக்கும், அதில் தனது சாதியை விண்ணப்பதாரர் தேர்வு செய்ய வேண்டும்.
இதே தமிழ்நாடு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழ் உள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என தெரிவு செய்தால், அதில் தானாகவே OC என பதிவு ஆகும், பின்னர் விண்ணப்பதாரர்கள் தங்களது தேசிய இனம் மற்றும் மதத்தை அதில் நிரப்பவேண்டும், விண்ணப்பிக் விரும்புவோர் கீழ்க்கண்ட லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்: https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/
குறிப்பு:- மேலும் இணையத்தில் எப்படி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்த முழு விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை