நீங்க 10 வது தான் படிச்சிருக்கீங்களா?...கவலையை விடுங்க.. உங்களுக்கான அரசு வேலை வாய்ப்பு இதோ!

விண்ணப்பிக்க கடைசி தேதி 30/7/2022.  பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது, சம்பளம் உள்ளிட்ட இதர விவரங்களை தெரிந்து கொள்ள Cuddalore.nic.in இணையதளத்தில் பார்வையிடலாம்..

Cuddalore District Welfare Society Jobs offer

பத்தாவது முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அனைவருக்குமான அரசு வேலை வாய்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  எந்த மாவட்டத்தில், விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த தகவலை வருமாறு பார்க்கலாம்..

கடலூர் மாவட்டத்திற்கான வேலை வாய்ப்பு:

கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 33 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. Pharmacist, Dental Assistant, Physiotherapist, Urban health nurse, multipurpose Hospital worker, Driver( Mobile medical unit),Optometrist, Refrigeration Mechanic,Data Entry Operator உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலமாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 30/7/2022.  பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது, சம்பளம் உள்ளிட்ட இதர விவரங்களை தெரிந்து கொள்ள Cuddalore.nic.in இணையதளத்தில் பார்வையிடலாம்..

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 விவரம் :

நிறுவனம்  -மாவட்ட நல வாழ்வு சங்கம் பணிகள் 

மொத்த காலியிடங்கள்  - 33 

பணியிடம்  - கடலூர் 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30/7/2022 

அதிகாரப்பூர்வ இணையதளம் -Cuddalore.nic.in

 

 


பனிகள், காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம் :

 பணிகள்                                       காலியிடங்கள்         சம்பளம் 

multipurpose Hospital worker               08                              ரூ.8,500/-

Dental Assistant                                      05                                ரூ.10,000/-
 
Data Entry Operator (SNCU)                  01                                  ரூ.10,000/-

Optometrist                                             01                                  ரூ.10,500/

Physiotherapist                                       03                                  ரூ.13,000/

Urban health nurse                                 06                                    ரூ.14,000
 

Pharmacist                                              01                                     ரூ.15,000
 

Refrigeration Mechanic                         01                                      ரூ.20,000

Driver( Mobile medical unit)                 07                                        தினக்கூலி

 

கல்வி தகுதி :

Pharmacist                                 -  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் D.Pharm தேர்ச்சி பெற்றவர்கள் 
                                                        விண்ணப்பிக்கலாம்             

Dental Assistant                          -        பணிக்கு விண்ணப்பதாக 10Th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Physiotherapist                            -       அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபியல்  இளங்கலை பட்டம் பெற்றவர்கள்                                                                                                விண்ணப்பிக்கலாம்  

Urban health nurse                      -         செவிலியர் படிப்பில் இரண்டு ஆண்டுகள் படித்து  சான்றிதழ் பெற்றவர்கள் 
                                                               விண்ணப்பிக்கலாம். 

 

Driver( Mobile medical unit)            -   10 தேர்ச்சி மற்றும் வாகன உரிமம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Optometrist                                      -    Diploma in Optometrist அல்லது Ophthalmic உதவியாளராக பணிபுரிந்தவர்கள் 
                                                                விண்ணப்பிக்கலாம்
Refrigeration Mechanic                     -       ITI in Refrigeration Mechanic படித்து சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் 

Data Entry Operator (SNCU)            -  அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பட்டம் மற்றும் தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 
 

 21 வயதிலிருந்து  35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

தேர்ந்தெடுக்கும் முறை :

நேர்காணல்  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :

 உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்
 மாவட்ட நல வாழ்வு சங்கம் (distric health society) 
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் 
அலுவலகம், 05 ,பீச் ரோடு,
 கடலூர் 607 001

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios