JEE Main 2026 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ஐஐடி, என்ஐடியில் சேர வேண்டுமா? இயற்பியல், வேதியியல், கணிதத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய பாடங்கள் இதோ.

JEE Main தேர்வில் வெற்றி பெற, மாணவர்கள் கடினமாக உழைப்பதோடு மட்டுமல்லாமல், தெளிவான படிப்பு உத்தியையும் (Study Strategy) வகுக்க வேண்டும். குறைந்த காலத்தில் அதிக பாடங்களைப் படிக்க வேண்டிய சூழல் இருப்பதால், மாணவர்கள் எதை முதலில் படிக்க வேண்டும் என்பதில் குழப்பமடையலாம். எனவே, அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும் பாடங்களை (High-scoring topics) கண்டறிந்து படித்தால், தரவரிசைப் பட்டியலில் எளிதாக முன்னேற முடியும். கடந்த கால வினாத்தாள்களை ஆராய்ந்து பார்த்ததில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் குறிப்பிட்ட சில பாடங்கள் தொடர்ந்து அதிக மதிப்பெண்களை வழங்கி வருவது தெளிவாகியுள்ளது.

இயற்பியல்: சூத்திரங்கள் மற்றும் அடிப்படை கருத்துக்கள்

இயற்பியலைப் பொறுத்தவரை, அடிப்படை கருத்துக்களைப் புரிந்து கொள்வதும், சூத்திரங்களைச் சரியாகப் பயன்படுத்துவதும் முக்கியம். 'Units and Measurements' பகுதி மிகவும் எளிதானது; இதில் பரிமாண பகுப்பாய்வு (Dimensional analysis) மற்றும் பிழைகள் (Errors) சார்ந்த கேள்விகள் மூலம் எளிதாக மதிப்பெண் பெறலாம். அதேபோல், 'Kinematics' மற்றும் 'Laws of Motion' பகுதிகளிலிருந்து தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. குறிப்பாக, ஈர்ப்பு விசை இயக்கம், சாய்வு தளங்களில் உள்ள தொகுதிகள் (Blocks on inclined planes) போன்றவை முக்கியமானவை.

• முக்கிய தலைப்புகள்: Horizontal Projectile Motion, Vertical Free Fall, Impulse Momentum, Traction and Friction.

• அதிக பயன் தரும் பகுதிகள்: Work, Energy and Momentum, Rotational Motion மற்றும் Gravitation.

• நவீன இயற்பியல்: Photoelectric Effect, Bohr’s atomic model மற்றும் Semiconductors (குறிப்பாக Logic Gates) போன்றவை நேரடி தியரி கேள்விகளாக வருவதால் அதிக மதிப்பெண் பெற உதவும். Electrostatics, DC Circuits மற்றும் Capacitors பகுதிகளும் மிக முக்கியம்.

வேதியியல்: அதிக மதிப்பெண் தரும் களம்

JEE Main தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளித் தரும் பாடமாக வேதியியல் உள்ளது.

• Physical Chemistry: இதில் Stoichiometry, Thermodynamics, Equilibrium, Kinetics போன்ற பகுதிகளில் கணக்கீடுகள் அதிகம் இருக்கும். சூத்திரங்களை (Formulas) நன்கு மனப்பாடம் செய்து பயிற்சி செய்தாலே இதில் முழு மதிப்பெண் பெறலாம்.

• Inorganic Chemistry: இதற்கு NCERT பாடப்புத்தகமே போதுமானது. Chemical bonding, Coordination compounds, Periodic properties, d- and f-block elements போன்ற பகுதிகள் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியவை மற்றும் நினைவில் வைக்கக்கூடியவை.

• Organic Chemistry: NCERT புத்தகத்தில் உள்ள Basic Organic Chemistry (GOC), Hydrocarbons, Alcohols, Aldehydes, Ketones போன்றவை அதிக கேள்விகள் வரும் பகுதிகள். குறிப்பாக Named Reactions மற்றும் Acidity/Basicity Trends ஆகியவற்றைத் தெளிவாகப் படித்துக்கொள்ள வேண்டும்.

கணிதம்: வேகம் மற்றும் துல்லியம்

கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற, தொடர்ந்து கணக்குகளைப் போட்டுப் பார்ப்பது அவசியம். இது உங்கள் வேகத்தையும், பிழையில்லாமல் விடையளிக்கும் திறனையும் அதிகரிக்கும். கணிக்கக்கூடிய வகையிலான கேள்விகள் வரும் சில பாடங்களில் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனம்.

• எளிதாக ஸ்கோர் செய்யும் பகுதிகள்: Matrices & Determinants, Statistics, Vector Algebra மற்றும் 3-D Geometry.

• சூத்திரங்கள் முக்கியம்: Straight Lines, Circles மற்றும் Conics பகுதிகளில் சூத்திரங்களை நன்கு படித்தாலே போதும்.

• அல்ஜீப்ரா மற்றும் கால்குலஸ்: Quadratic Equations, Sequences & Series, Binomial Theorem ஆகியவற்றிலிருந்து நேரடி கேள்விகள் வரும். Limits, Differential Equations மற்றும் Application of Derivatives (Maxima-Minima) போன்ற கால்குலஸ் பகுதிகளில் தினசரி பயிற்சி அவசியம்.

வெற்றிக்கான இறுதி மந்திரம்

JEE Main தேர்வில் மொத்த மதிப்பெண்களை அதிகரிக்க, மாணவர்கள் யூகிக்கக்கூடிய மற்றும் அதிக வெயிட்டேஜ் உள்ள பாடங்களில் (Predictable high-potential topics) தனி கவனம் செலுத்த வேண்டும். அனைத்து சூத்திரங்களையும் அடிக்கடி திருப்புதல் செய்வதும், முந்தைய ஆண்டு வினாத்தாள்களை (Previous years’ questions) பயிற்சி செய்வதும் உங்களின் வேகத்தையும் துல்லியத்தையும் அதிகரிக்கும். இது தேர்வு குறித்த பயத்தைப் போக்கி, நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள உதவும்.