இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS, 4 முதல் 6 வருட அனுபவமுள்ள டெவலப்பர்களுக்காக புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இதற்கான நேரடி நேர்காணல் டிசம்பர் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

IT வேலை வாய்ப்பு காத்திருக்கு மக்களே! கைநிறைய சம்பளம் வேண்டுமா?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS (Tata Consultancy Services) நிறுவனம், Java + Spring Boot துறையில் அனுபவம் கொண்டவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை நகரிலேயே நேர்காணல் நடைபெற உள்ளது.

TCS என்பது டாடா குழுமத்தின் மிகப் பெரிய ஐடி பிரிவாகச் செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஐடி துறையில் உயர்ந்த சம்பளமும், தொழில் முன்னேற்றமும் அதிகம் என்பதால் பலர் இத்துறைக்கு மாறி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு TCS இந்த புதிய பணியாளர் தேடல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணிக்கான துறை

Java Spring Boot Developer

தேவையான தகுதி

  • 4 முதல் 6 ஆண்டு வரை தொடர்புடைய துறையில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Spring Boot பயன்படுத்தி Java-based applications உருவாக்கும் திறன் அவசியம்.
  • REST APIs உருவாக்கல் மற்றும் வெளிப்புற சிஸ்டம்களுடன் இணைக்கும் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Java (Version 8 அல்லது அதற்கு மேல்), Spring MVC, Spring Security போன்றவற்றில் நிபுணத்துவம் வேண்டும்.

சம்பளம்

இந்த அறிவிப்பில் ஊதியம் குறித்து தனியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இறுதி நேர்காணல் நிலையில்தான் சம்பளம் பற்றிய விவரம் வழங்கப்படும் என தகவல்.

நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் முகவரி

தேதி: டிசம்பர் 5 (சனிக்கிழமை) 

இடம்: Tata Consultancy Services Ltd, 

Magnum Office, 200 Feet Radial Road, MCN Nagar Extension,

 Thoraipakkam, Chennai – 600097

நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவோர் நேரடியாக Chennai கிளையிலேயே நியமிக்கப்படுவார்கள். ஐடி நிறுவனங்களில் அனுபவமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றால் அது மிகையல்ல. Java மற்றும் Spring Boot துறையில் திறமைகளைக் காட்ட ஆர்வமும், அனுபவமும் உள்ளவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்று பயன்பெறலாம்.