IREL India Ltd நிறுவனத்தில் அப்ரண்ட்டீஸ் வேலை... விண்ணப்பிப்பது எப்படி? ஊதியம் எவ்வளவு?
மத்திய அரசின் அணு ஆற்றல் துறை கீழ் இயங்கும் Indian Rare Earths Limited என்று அழைக்கப்படும் IREL India Limited நிறுவனத்தில் அப்ரண்ட்டீஸ் வேலைக்கான காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் அணு ஆற்றல் துறை கீழ் இயங்கும் Indian Rare Earths Limited என்று அழைக்கப்படும் IREL India Limited நிறுவனத்தில் அப்ரண்ட்டீஸ் வேலைக்கான காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
- Graduate Apprentice, Technician Apprentice, ஆய்வக உதவியாளர், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 103 பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி:
- மெக்கானிகல், எலக்ட்ரிக்கல், சிவில் இஞ்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆய்வக உதவியாளார் பணிக்கு வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மார்க்கெட்டிங் பிரிவுக்கு எம்.பி.ஏ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- இந்தப் பணிகளுக்கு 18 வயதிலிருந்து 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதியம்:
- 1992ஆம் ஆண்டில் Apprenticeship Rules, விதிகளின்படி பயிற்சி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணபிக்க கடைசித் தேதி:
- 30.08.2022
விண்ணப்பிப்பது எப்படி?
- IREL இணையதளத்தில் கொடுக்கபப்ட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Deputy General Manager (HR & A),
OSCOM, IREL (India) Limited,
Matikhalo,
Ganjam,
Odisha – 761045