இந்திய அஞ்சல் துறை வங்கியில் காலியாக உள்ள 47 நிர்வாக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் அஞ்சல் துறை அவ்வப்போது முறையான அறிவிப்புகளை வெளியிட்டு காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய அஞ்சல் துறை வங்கியில் காலியாக உள்ள 47 நிர்வாக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணியிட விவரம் 

பணி : எக்ஸிகியூட்டிவ் (Executive)

சம்பளம் : மாதம் ரூ.30,000

வயது வரம்பு : 1.3.2024 தேதியின் படி 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விற்பனை, சந்தையியல் பிரிவில் எம்.பி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு வேலை வேண்டுமா? காவல்துறையில் 4,187 பணியிடங்கள்.. போலீஸ் வேலையில் சேர வாய்ப்பு.. முழு விபரம் இதோ !!

தேர்வு முறை :

கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள், நேர்முக தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் ஆன்லைன் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்படும். தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்

விண்ணப்பக்கட்டணம் :

எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150 விண்ணப்பக்கட்டணம். இதர பிரிவினருக்கு ரூ.750 ஆகும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

மத்திய சிறு குறு நிறுவனங்கள் துறையில் வேலை! சொளையா ரூ.60,000 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை : www.ippbonline.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.04.2024

இந்த காலிப்பணியிடம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.