Resume மட்டுமல்ல ராஜினாமா கடிதத்திலும் பல புதுமைகள்.. இணையத்தை கலக்கும் பல வகை Resignation Letters!
கடந்த சில வருடங்களாக Resumeகளை போலவே ராஜினாமா கடிதமும் கவர்ச்சிகரமானதாக மாறி வருகின்றது. ஆனால் அது எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி அழகுபடுத்துவது என்பது நமது திறமையைப் பொறுத்தது.
மிகவும் புத்திசாலிகளான சிலர் எழுதிய ராஜினாமா கடிதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் இப்போது எல்லாவற்றிலும் புதுமையை விரும்புகின்றனர், ஆதலால் அவர்களுடைய படைப்பாற்றலும் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. திருமண அழைப்பிதழ், புது விதமான போட்டோ ஷூட்கள், திருமணத்திற்கு முன் சினிமா ஸ்டைலில் வீடியோ ஷூட், என எல்லாவற்றிலும் வித்தியாசம் தேடுகிறார்கள்.
ஒரு வேலையில் சேரும் முன், நாம் அந்த நிறுவனத்திடம் கொடுக்கும் ரெஸ்யூமே என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே வேலை தருபவர்கள் அதை பார்த்ததும் அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம் அந்த விண்ணப்பத்தை தயார் செய்கிறார்கள் இளைஞர்கள்.
மத்திய பாதுகாப்பு படையில் வேலை.. மொத்தம் 1876 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது? முழு தகவல்!
ஆனால் அதே வேலையை விட்டு வெளியேறும்போது, எப்போது இங்கிருந்து நகர்வோம் என்ற வேகத்தில் எதையாவது எழுதிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்ப முயற்சிக்கின்றனர். அல்லது அந்த நிறுவனம் வழங்கும் படிவத்தை நிரப்பிவிட்டு வேலையில் இருந்து விடைபெறுகிறார்கள். ஆனால் சிலர் இந்த ராஜினாமா கடிதத்திலும் ஒரு புதுமையை புகுத்த விரும்புகின்றனர்.
குறிப்பாக இந்த புகைப்படம் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஒருவர் எழுதிய ராஜினாமா கடிதம் உள்ளது. ஆனால் அவர் அங்கிருந்து, வேலையை விட்டு விலகும் விஷயத்தை வேறு விதத்தில் கூறியுள்ளார். ராஜினாமா கடிதத்தின் நடுவில் கெல்லாக்ஸ், லிட்டில் ஹார்ட், பெர்க், குட் டே, 5 ஸ்டார், எவ்ரி டே மற்றும் ஜெம்ஸ் போன்ற ரேப்பர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த புகைப்படம் இதுவரை 1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதேபோல கடந்த ஆண்டு, ஒருவரின் ராஜினாமா கடிதம் ட்விட்டரில் செய்தியாக வெளியானது. அதில் அந்த நபர் தான் பணிபுரிந்த நிறுவனத்திற்கோ, முதலாளிக்கோ நன்றி கூட சொல்லவில்லை. நேரடியாக "ராஜினாமா கடிதம்" என்று எழுதிக்கொடுத்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.