Asianet News TamilAsianet News Tamil

மத்திய பாதுகாப்பு படையில் வேலை.. மொத்தம் 1876 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது? முழு தகவல்!

மத்திய பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான விண்ணப்பங்கள் குறித்து தற்பொழுது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்.

Staff Selection Commission called for 1876 Sub Inspector post vacancies
Author
First Published Jul 25, 2023, 9:54 PM IST

இந்த அறிவிப்பின்படி சுமார் 1876 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிக்கையை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

Sub-Inspector (Exe.) in Delhi Police-Male
Sub-Inspector (Exe.) in Delhi Police-Female
Sub-Inspector (GD) in CAPFs

சம்பள விவரம் 

ரூபாய் 35,400 முதல் 1,12,400 வரை -

கல்வித் தகுதி?

இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு?

02.08.1998க்கு பின் பிறந்தவர்கள் முதல் 01.08.2003க்கு முன் பிறந்தவர்கள் வரை விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

எந்த முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்?

தேர்வாணையம் நடத்தும் எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பிறகு அவர்களுக்கு நேர்காணல் மற்றும் உடற்தகுதி தேர்வு வைத்து தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தமிழக அரசு பேருந்துகளில் வேலைவாய்ப்பு: காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவு!

Follow Us:
Download App:
  • android
  • ios