ITBP Recruitment : இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தோ (ITBP) திபத்திய எல்லை காவல் படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

பணி விவரம்

குரூப் சி அடிப்படையில் கான்ஸ்டபிள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் எல்லை பாதுகாப்பு காவல் படையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.

சம்பள விவரம்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஏழாவது சிபிசி-யின்படி மாத ஊதியமாக சுமார் 21,700 ரூபாய் முதல் 69,100 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு

SC வகுப்பினரை பொறுத்தவரை 2.8.1995 முதல் 1.8.2005ம் ஆண்டுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
ஜெனரல் வகுப்பை சேர்ந்தவர்கள் 2.8.2000 முதல் 1.8.2005ம் ஆண்டுக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் OBC வகுப்பை சேர்ந்தவர்கள் 2.8.1997 முதல் 1.8.2005ம் ஆண்டுக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

அக்டோபர் மாதம் 8ம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். உடல் தகுதி தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்கள் அறிய 

https://drive.google.com/file/d/1p3Jhmxid78_q_s89QOf6EIM5MwIjUqRn/view என்ற இணையதள முகவரியை அணுகவும்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை! 8வது பாஸ் செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!