10ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும்.. இந்திய கப்பற்படையில் அருமையான வேலை வாய்ப்பு !
அக்னிவீரர்களின் வயது 17 முதல் 21 ஆண்டுகள் மற்றும் சம்பளம் மாதம் 30 முதல் 40 ஆயிரம் ஆகும்.
அக்னிபத் திட்டம் என்பது, முப்படைகளும் நான்கு வருட ஒப்பந்தம் அடிப்படையில் வீரர்கள் பணியமர்த்தப்படுவதாகும். இது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு இளைமையான வீரர்களை கொடுக்கும் திட்டம் ஆகும். இந்த ஆண்டு 46 ஆயிரம் இளைஞர்கள் சஹஸ்த்ர படைகளில் சேர்க்கப்பட உள்ளனர். இத்திட்டத்தின்படி, நான்கு ஆண்டுகளுக்கு இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் 'அக்னிவீர்' என்று அழைக்கப்படுவார்கள்.
அக்னிவீரர்களின் வயது 17 முதல் 21 ஆண்டுகள் மற்றும் சம்பளம் மாதம் 30 முதல் 40 ஆயிரம். பணியில் சேரும் இளைஞர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் கூடுதல் வாய்ப்பைப் பெறுவார்கள், மீதமுள்ள 75 சதவீதம் பேர் வேலையை விட்டு வெளியேற வேண்டும். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் அரசு வேளையில் சேருவதற்கு அருமையான வாய்ப்பு ஆகும்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படை அக்னிவீர் (MR) பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை இன்று (ஜூலை 25) முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஜூலை 30 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளமான joinindiannavy.gov.in இல் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதற்கு 40 பெண்கள் உட்பட மொத்தம் 200 காலியிடங்கள் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு..MS Office தெரிந்தால் போதும்.. உங்களுக்கு காத்திருக்கிறது தமிழக அரசு வேலை..!
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் முறையானது, எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் உடற்தகுதி உள்ளிட்ட பல அடுக்கு செயல்முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். விரிவான தகவலுக்கு, விண்ணப்பதாரர்கள் joinindiannavy.org என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10வது (மெட்ரிகுலேஷன்) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதே தகுதி. விண்ணப்பதாரர்கள் 01 டிசம்பர் 1999 மற்றும் 31 மே 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும். அதற்க்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டில் ரூ.33,000, மூன்றாம் ஆண்டில் ரூ.36,500, நான்காம் ஆண்டில் மாதம் ரூ.40,000 சம்பளம் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அக்னிவீர் (MR)-க்கான சுருக்கப்பட்டியல் - ஆண் மற்றும் பெண் காலியிடங்களை விட நான்கு மடங்கு என்ற விகிதத்தில் மாநில வாரியாக மேற்கொள்ளப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!