Asianet News TamilAsianet News Tamil

இந்திய கடலோர காவல்படையில் சேர ஆசையா..? 260 காலியிடங்கள்.. இந்த தகுதிகள் போதும் வேலைஉறுதி!

இந்திய கடலோர காவல்படையில் 260 காலியிடங்கள் உள்ளன. பிப்ரவரி 27, 2024 விண்ணப்பிக்க கடைசி நாள். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

indian coast guard recruitment 2024 260 eligibility vacancies for navik posts and other details here in tamil mks
Author
First Published Feb 6, 2024, 11:53 AM IST

இந்திய கடலோர காவல்படை Navik General Duty தகுதியானவர்களை நியமிக்க உள்ளது. மொத்தம் 260 Navik (பொதுப் பணி) பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். பிப்ரவரி 27, 2024 விண்ணப்பிக்க கடைசி நாள். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடலோர காவல் படையில் வேலை பெற விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்..

விண்ணப்பிக்கும் முன், பதவித் தகவல், தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இவை அனைத்தையும் பற்றிய தகவல்கள் இதோ.

கல்வித் தகுதி: இந்திய கடலோரக் காவல்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ வாரியத்திலிருந்து 12ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 22 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முக்கியமாக, விண்ணப்பதாரர்கள் 01 செப்டம்பர் 2002 முதல் 31 ஆகஸ்ட் 2006 வரை பிறந்திருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: மாதம் ரூபாய். 21,700 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:
SC/ST விண்ணப்பதாரர்கள் தவிர 
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணம் ரூ.300 ஆகும். 

காலியிட விவரங்கள்:
வடக்கு - 79 பணியிடங்கள் 
மேற்கு - 66 பணியிடங்கள் 
வடகிழக்கு - 68 பணியிடங்கள் 
கிழக்கு - 33 பணியிடங்கள் 
வட மேற்கு - 12 பணியிடங்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் - 03 பணியிடங்கள் என மொத்தம் 260 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை https://joinindiancoastguard.cdac.in/cgept/ கிளிக் செய்யவும்.

முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் தொடங்கும் தேதி: பிப்ரவரி 13, 2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 27, 2024

Follow Us:
Download App:
  • android
  • ios