இந்தியன் வங்கியின் மதுரை மண்டலம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கிளைகளுக்கு நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புகிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி சான்றிதழ்  குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அனுபவம் கண்டிப்பாக தேவை

இந்தியன் வங்கியின் மதுரை மண்டல அலுவலகம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள கிளைகளில் நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்பட விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சான்றிதழ் அவசியம்.

வயதுவரம்பு இதுதான் மக்களே

 வயது வரம்பு 30 முதல் 50 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 5 ஆண்டுகள் நகை மதிப்பீட்டுத் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதேசமயம், 10 ஆண்டு அனுபவம் கொண்டவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் கூடுதல் 2 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் அனப்ப வேண்டாம்

விண்ணப்பத்துடன் கல்விச்சான்றுகள், பயிற்சி சான்றிதழ், ஆதார், பான், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை மற்றும் காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட தடையில்லா சான்றிதழ் (NOC) ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதுரை மண்டல அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்; மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. இந்தப் பணிக்கு ஊதியம் கமிஷன் அடிப்படையில் வழங்கப்படும் என்பதால் நிரந்தர பணியிட உத்தரவாதம் இல்லை. 

பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும், தேர்வு செயல்முறையை எந்த நேரத்திலும் நிறுத்தவோ ரத்து செய்யவோ வங்கிக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12.12.2025. மேலும் விவரங்களுக்கு மண்டல மேலாளர், இந்தியன் வங்கி, மதுரையை தொடர்புகொள்ளலாம்.