Asianet News TamilAsianet News Tamil

IBPS PO Recruitment 2023: வங்கி துறையில் வேலைவாய்ப்பு... IBPS-யில் PO பதவிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு!!

IBPS PO Notification 2023 : இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன், PO பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

IBPS PO Recruitment 2023 Registration for PO Clerk begins tomorrow at ibps.in, important dates here
Author
First Published Jun 1, 2023, 10:26 AM IST

ஒவ்வொரு ஆண்டும் IBPS, இந்தியா முழுக்க இருக்கும் அதனுடைய கிளைகளில் ப்ரோபேஷனரி அதிகாரி பதவிக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடுகிறது. இந்த 2023-24 நிதியாண்டிற்கான IBPS -யின் PO காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று முதல் ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி குரூப் ஏ - அதிகாரிகள் (ஸ்கேல்-I, II & III) மற்றும் குரூப் பி - அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) ஆட்சேர்ப்பு RRB களுக்கான (CRP RRBs XII) ஆட்சேர்ப்பு தேர்வுகள் வங்கி பணியாளர் தேர்வாணைய நிறுவனத்தால் (IBPS) நடத்தப்படும். 

ibps po last date to apply 2023

இந்த தேர்வுகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் இருக்கலாம். குரூப் ஏ- அதிகாரிகள் (ஸ்கேல்-I, II & III) ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள், அதே செயல்பாட்டின் கீழ் NABARD மற்றும் IBPS உதவியுடன் நோடல் பிராந்திய கிராமப்புற வங்கிகளால் ஒருங்கிணைக்கப்படும். நவம்பர், 2023-ல் தற்காலிகமாக உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என IBPS அறிவிப்பு கூறுகிறது. 

IBPS கிளார்க் PO பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூலை 01 முதல் ஜூலை 21 அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in இல் விண்ணப்பிக்கலாம். குரூப் ஏ-அதிகாரிகள் மற்றும் குரூப் பி-அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) ஆட்சேர்ப்புக்கான ஆர்ஆர்பிகளுக்கான (CRP RRBs XII) ஆன்லைன் தேர்வுகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் தற்காலிகமாக  நடத்தப்படும். குரூப் 'ஏ' அதிகாரிகளுக்கான நேர்காணல்கள் நவம்பரில் நடத்தப்படும். 

இதையும் படிங்க: எஸ்பிஐ பேங்க் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்! இந்த ஆவணங்கள் இருந்தா மட்டும் போதும்!

Follow Us:
Download App:
  • android
  • ios