Asianet News TamilAsianet News Tamil

ரூ.32,000 வரை சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. விவரம் உள்ளே

ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

Hindustan Salts Limited Recruitment Notification 2022 for Assistant Manager and other posts
Author
First Published Oct 7, 2022, 4:27 PM IST

நிறுவனத்தின் பெயர்: ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட்

காலி பணியிடங்கள்:  19 

பணியின் பெயர்: Assistant Manager, Junior Manager, Assistant , Supervisor 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

ப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி பெற்று, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 க்குள் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க:upsc online App: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக புதிய ‘ஆப்ஸ்’: யுபிஎஸ்சி அறிமுகம்

கல்வி தகுதி:

Assistant Manager (Civil) - BE/ B.Tech in Civil, MBA in Operation Management 

Assistant Manager (F&A) - CA/ ICWA, MBA in Financial Management 

Junior Manager (Electrical) - BE/ B.Tech, Graduation, Post Graduation in Electrical 

Assistant (P&A)- Diploma/ Graduation/ Post Graduation in Diploma 

Assistant (Commercial and F&A) - Graduation in Commerce 

Assistant (Project) - Diploma/ Graduation 

Supervisor (Electrical) - Post Graduation Diploma in Electrical 

Electrician and DG Set Operator, Operator and Fitter, General Fitter, Fitter and Welder ஆகிய பணிக்கு ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பள விவரம்:  

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 15,000 முதல் ரூ.32,977 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும். எஸ்.டி/எஸ்.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் படிக்க:9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் 1000... மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios