Asianet News TamilAsianet News Tamil

ESIC காப்பீட்டுக் கழகத்தில் ரூ. 1 லட்சம் சம்பளத்தில் வேலை.. தேர்வு எதுவும் கிடையாது..விண்ணப்பிப்பது எப்படி..?

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC)ஆனது காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 

ESIC Recruitment 2022 for Contract Specialist and Senior Resident post
Author
First Published Sep 12, 2022, 6:07 PM IST

நிறுவனத்தின் பெயர்: பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC)

காலி பணியிடங்கள்: 13

பணியின் பெயர்: Contractual Specialist மற்றும் Senior Resident

பணியின் விவரம்:  Full Time / Part Time 

Contractual Specialist – 7 பணியிடங்கள்
Senior Resident – 6 பணியிடங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முறை: 

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துக் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க:போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. தமிழ்நாடு காவல்துறையில் அருமையான வேலைவாய்ப்பு.!

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கொண்டு நேர்காணலில் கலந்துக் கொள்ள வேண்டும்.

கல்வி தகுதி:

Contractual Specialist - விண்ணப்பத்தாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree / Diploma பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Resident -  விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree / Diploma /MBBS என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

Contractual Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 70 ஆக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல் Senior Resident பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: 

Full Time Contractual Specialist பணிக்கு மாதம் ரூ.1,16,174 சம்பளமாக வழங்கப்படும். Part Time Contractual Specialist பணிக்கு மாதம் ரூ.60,000 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்காணல் முறையில் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

மேலும் படிக்க:மத்திய அரசு ஊழியர்களின் 4 % அகவிலைப்படி உயர்வு.. அறிவிப்பு எப்போது வெளியாகும்..? முக்கிய தகவல்
 

Follow Us:
Download App:
  • android
  • ios