பி.இ படித்தவரா நீங்கள்? ரூ. 70,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள எர்நெட் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள எர்நெட் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐஓடி சாண்ட்பாக்ஸ் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் திட்ட மேலாளர், சீனியர் ப்ராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் ப்ராஜெக்ட் இன்ஜினியர் ஆகிய 04 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ERNET India அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து மின்னஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆர்வம், தகுதி மற்றும் அனுபவமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை hari.krishna@ernet.in அல்லது kesavan@ernet.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 6, 2024 அன்று மாலை 4:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்: ரூ.15 லட்சத்தை வாரி வழங்கும் அரசு - உடனே விண்ணப்பிங்க
ERNET இந்தியா வேலைவாய்ப்பு காலியிட விவரம் :
பதவியின் பெயர் : திட்ட மேலாளர், மூத்த திட்டப் பொறியாளர், மற்றும் திட்டப் பொறியாளர்
பதவிகளின் எண்ணிக்கை : 04
ஒப்பந்த காலம் : ஆரம்பத்தில் 1 வருடம், நீட்டிக்கப்படலாம்
இடம் : சென்னை மற்றும் பெங்களூரு
விண்ணப்ப முறை : மின்னஞ்சல் (hari.krishna@ernet.in அல்லது kesavan@ernet.in)
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 6, 2024
திட்ட மேலாளர் பதவிக்கு 1 காலியிடம் உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர் சென்னையில் பணியமர்த்தப்படுவார். மூத்த திட்டப் பொறியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் உள்ள நிலையில், தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை & பெங்களூருவில் பணியமர்த்தப்படுவார்கள். திட்டப் பொறியாளர் (நிலை 1)/ திட்டப் பொறியாளர் (நிலை 2) பணிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர் சென்னையில் பணியமர்த்தப்படுவார்.
திட்ட மேலாளர்
கல்வி: முழுநேர B.Tech/ BE/MCA/ M.Sc அல்லது எலக்ட்ரானிக்ஸ், ஐடி, கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அது போன்ற துறைகளில் அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும்.
அனுபவம்: 4 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 50 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.55,000 – 70,000/-
மூத்த திட்டப் பொறியாளர்
கல்வி: முழுநேர B.Tech/ BE/MCA/ M.Sc அல்லது எலக்ட்ரானிக்ஸ், ஐடி, கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அது போன்ற துறைகளில் அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
4 - 6 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்
வயது வரம்பு: 45 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.45,000 – 60,000/-
டிகிரி இருந்தால் போதும்; ரூ.82,000 வரை சம்பளம்; BEL நிறுவனத்தில் வேலை!
திட்டப் பொறியாளர் (நிலை 1)
கல்வி: முழுநேர B.Tech/BE/MCA/M.Sc அல்லது எலக்ட்ரானிக்ஸ், IT, கம்யூனிகேஷன் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற தொடர்புடைய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: தேவையில்லை.
வயது வரம்பு: 35 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.25,000 – 35,000/-
திட்டப் பொறியாளர் (நிலை 2)
கல்வி: முழுநேர B.Tech/BE/MCA/M.Sc அல்லது தொடர்புடைய துறைகளில் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: 1 முதல் 3 ஆண்டுகள்
வயது வரம்பு: 40 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.35,000 – 55,000/-
ERNET இந்தியா ஆட்சேர்ப்பு 2024க்கான தேர்வு செயல்முறை எழுத்துத் தேர்வு, நேர்காணல் அல்லது இரண்டையும் உள்ளடக்கியது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.