ரூ. 50,000 சம்பளம்.. ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இங்கு காலியாக உள்ள 2 பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இந்த பணிக்கு வரும் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,42,00 வரை சம்பளம்.. நவோதயா பள்ளிகளில் 1377 காலியிடங்கள்.. முழு விவரம் இதோ..
பணி : டிசைன் இன்ஜினியர் ( மேக்கானிக்கல்)
காலியிடங்கள் : 2
சம்பளம் : மாதம் ரூ. 50,000
வயது வரம்பு : 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், புரொட்க்ஷன், உற்பத்தி, இண்டஸ்டீரியல் இன்ஜினியரிங் என ஏதாவது ஒரு பிரிவில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை :
நேர்முக தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 300. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.avnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி தேவையான சான்றிதழ்களை சுய சான்றொப்பம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Works Manager, Admin, Engine Factory, Avadi, Chennai – 600 054
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 18.04.2024
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.