Asianet News TamilAsianet News Tamil

மொத்தம் 4,062 பணியிடங்கள்.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. மத்திய அரசு பள்ளியில் வேலை.. முழு விவரம் இதோ..

மத்திய அரசின் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள 4062 பணியிடங்களுக்கு விண்ணப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

EMRS 2023 Recrutiment 4062 vacancies for Teaching non teaching jobs in eklavya model residential school Rya
Author
First Published Oct 17, 2023, 10:17 AM IST | Last Updated Oct 17, 2023, 10:17 AM IST

மத்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 400 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 8 ஏகலைவா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள முதல்வர், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் மொத்தம் 4062 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இந்த பணிகளுக்கு அக்டோபர் 19 வரை விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரம்

முதல்வர் - 303 காலியிடங்கள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (PGT) - 2266 காலியிடங்கள்

கணக்காளர் - 361 காலியிடங்கள்

ஜூனியர் செயலக உதவியாளர் (JSA) - 759 காலியிடங்கள்

ஆய்வக உதவியாளர் - 373 காலியிடங்கள்

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வயது வரம்பு :

முதல்வர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

கணக்காளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

ஜூனியர் செயலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டிபிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

முதல்வர் : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் மற்றும் BEd அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கில வழியில் கற்பிப்பதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்-: விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து இரண்டு வருட ஒருங்கிணைந்த முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கணக்காளர்: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் செயலகக் கணக்காளர்: விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் மூத்த இரண்டாம் நிலை (பன்னிரண்டு வகுப்பு) சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தி தட்டச்சு செய்வதில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் இருக்க வேண்டும்.

 

SSC February Exam Calendar 2024 : எஸ்எஸ்சி தேர்வு தேதிகள் வெளியீடு.. பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

ஆய்வக உதவியாளர்: விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வக நுட்பத்தில் சான்றிதழ்/டிப்ளமோவுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியல் பாடத்துடன் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் : 

முதல்வர் - ரூ. 78800-209200/-

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்- ரூ. 47600-151100/-

கணக்காளர் - ரூ. 35400-112400/-

ஜூனியர் செயலகக் கணக்காளர்: - ரூ. 19900-63200/-

ஆய்வக உதவியாளர் - ரூ. 18000-56900/-

எப்படி விண்ணப்பிப்பது?

emrs.tribal.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்

முகப்புப் பக்கத்தில், "Recruitment" என்பதைக் கிளிக் செய்யவும்.

Principal/PGT/Non-teaching staff விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்யவும் (பொருந்தும்)

விண்ணப்பத்தை பதிவு செய்து தொடரவும்

கட்டணம் செலுத்தி, பூர்த்தி செய்த படிவத்தை சமர்ப்பித்து பதிவிறக்கவும்

எதிர்கால குறிப்புக்கு ஒரு பிரிண்ட்அவுட் எடுக்கவும்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு

முதல்வர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேரடி இணைப்பு

முதுகலை பட்டதாரி காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேரடி இணைப்பு.

ஆசிரியர் அல்லாத காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேரடி இணைப்பு.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios