இன்டர்வியூவில் பொய் பேசுபவர்களை ஒரே கேள்வியில் கண்டுபிடிக்கலாம்! இதுதான் எலான் மஸ்க் ஐடியா!
எலான் மஸ்க் பொய் சொல்பவர்களைக் பிடிக்க பயன்படுத்தும் கேள்விக்கு ஆய்வுபூர்வமான நிரூபணம் கிடைத்துள்ளது. உண்மையையும் பொய்யையும் பிரிந்து அறிய உதவும் அந்த ஒரு கேள்வி என்ன தெரியுமா?
உலகப் புகழ்பெற்ற தொழிலபதிபர் எலான் மஸ்க் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நேர்காணலில் பொய் சொல்பவர்களைக் கண்டுபிடிக்க ஒரு சூப்பரான ஐடியாவைக் கொடுத்திருக்கிறார்.
2017 இல் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, நேர்காணலுக்கு வந்த அனைவரிடமும் ஒரே கேள்வியைக் கேட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். "நீங்கள் பணிபுரிந்த இடத்தில் சந்தித்த கடினமான பிரச்சனைகள் என்னென்ன? அவற்றிற்கு எவ்வாறு தீர்வு கண்டீர்கள்?" என்பதுதான் அந்தக் கேள்வி.
இந்தக் கேள்வி பொய் சொல்பவர்களைக் பிடிக்க உதவியது என்று எலான் மஸ்க் கூறினார். அவரது கூற்று இப்போது ஒரு ஆய்வு மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. 'ஜர்னல் ஆஃப் அப்ளைடு ரிசர்ச் இன் மெமரி அண்ட் காக்னிஷன்' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று எலான் மஸ்க்கின் ஐடியா எவ்வளவு தூரம் நிஜமானது என்று பரிசோதித்துப் பார்த்திருக்கிறது.
அமெரிக்காவில் படிக்கணுமா? தூதரகம் நடத்தும் கல்விக் கண்காட்சியில் சூப்பர் சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க!
"பொய்யரைக் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. ஒருவர் தன்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு விரிவாக பதில் கூறினால், அவர்கள் உண்மையையே சொல்வார்கள். தெளிவற்ற பதிலைக் கொடுக்கும் ஒருவர் உண்மையைச் சொல்லவில்லை என்று அறிந்துகொள்ளலாம். சிறிய விவரங்கள் முக்கிமானதாக இருக்கும். அதை சரிபார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ளலாம்" என்று ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான கோடி போர்ட்டர் குறிப்பிட்டுள்ளார்.
"தங்களுக்கு ஆர்வமுள்ள ஒரு விஷயத்தைப் பற்றி விரிவாக பேச வாய்ப்பு வழங்கினால், அவர்கள் உண்மையைச் சொல்கிறார்களா அல்லது பொய் சொல்கிறார்களா என்பதைச் சிறப்பாகக் கண்டறிய முடியும். பொய் சொல்பவர்கள் தங்கள் தவறுகளை மறைக்கவே முயல்வார்கள்" என்றும் போர்ட்டர் விளக்குகிறார்.
"பொய் சொல்பவர்கள் அதிகமான தகவல்களைக் கூறினால், பொய் என்று கண்டறிவது எளிமையாகிவிடும் என்பதால் குறைவான தகவலை மட்டும் வழங்குகிறார்கள்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேர்காணலில் இந்த அணுகுமுறைக்கு AIM என்று பெயர் என்றும் இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது.
"எலான் மஸ்க் திறமையானவர்களை வடிகட்டி அறிந்துகொள்வதற்குதான் நேர்காணலில் இந்த முறையைப் பயன்படுத்துகிறார். அதே நேரத்தில் அவர்கள் தங்கள் ரெஸ்யூமில் கூறியிருப்பதுடன் அவர்கள் பேசுவது ஒத்துப் போவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்கிறார். இந்த முறை ஒருவர் உண்மையில் தன்னியல்புடன் வெளிப்படுகிறாரா என்று கண்டறிய உதவுகிறது என்றும் சொல்கிறார்" என்றும் ஆய்வு விவரிக்கிறது.
கொல்கத்தா மருத்துவர் வழக்கு: யூடியூபர் துருவ் ரத்தியின் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம்!