மத்திய அரசின் DRDO-வில் வேலைவாய்ப்பு... மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளம்/- தேர்வு கிடையாது! விண்ணப்பிப்பது எப்படி?

DRDO Recruitment 2023: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)-வில் காலியான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2023.
 

DRDO Recruitment 2023 for Junior Research Fellow

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow) என்ற பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

பணி விவரம்

  • Junior Research Fellow, காலியிடங்கள்: 01 

வயது வரம்பு 

விண்ணப்பதாரர்களின் வயதானது 28க்கு மிகாமல் இருக்க வேண்டும். ( 26/04/2023 அன்று கணக்குப்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது )  

கல்வி தகுதி 

நல்ல கேட் மதிப்பெண்ணுடன், பி.இ / பி.டெக் முதல் பிரிவில் தேர்ச்சியானவர்கள் அல்லது எம்.இ / எம்.டெக் முதல் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

  • எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்  (ECE)அல்லது
  • மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு இன்ஜினியரிங் (ETC)அல்லது
  • எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்  (E&I) அல்லது
  • அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் (A, E & I). 

இதையும் படிங்க: சூரிய கிரகணம் – எதை எல்லாம் செய்யலாம்! கண்டிப்பாக கர்ப்பிணிகள் தேங்காய் வைத்து கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?

சம்பளம் 

தேர்வாகும் விண்ணப்பதார்களுக்கு ரூ.31 ஆயிரம் மாத சம்பளம். 

தேர்வு செயல்முறை 

நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணல் குறித்து அறிவிக்கப்படும். வீடியோ கான்பரன்சிங் அல்லது நேரடியாக நேர்காணல் நடைபெறும். 

எப்படி விண்ணப்பிப்பது

டிஆர்டிஓவின் (DRDO) அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை உரிய ஆவணங்களுடன் மின்னஞ்சல் ( hrd.itr@gov.in ) மூலம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி26.04.2023. முழுமையற்ற விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது. கடைசி தேதிக்கு பின் அனுப்பப்படும் வேறு எந்த விதமான விண்ணப்பமும் நிராகரிக்கப்படும். 

இதையும் படிங்க: SSC GD கான்ஸ்டபிள் உடல் தகுதித்தேர்வு: அட்மிட் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பு!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios