Asianet News TamilAsianet News Tamil

எஞ்சினியரிங் படித்தவருக்கு மத்திய அரசு வேலை; ரூ.1.4 லட்சம் சம்பளம்! இப்பவே அப்ளை பண்ணுங்க

மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம் (CPRI) பல்வேறு கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 99 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

CPRI Recruitment 2023: Apply for 99 posts, salary upto Rs 45K
Author
First Published Apr 12, 2023, 10:09 AM IST | Last Updated Apr 12, 2023, 10:32 AM IST

மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலகத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Power Research Institute) பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவகிறது. போபால், ஐதராபாத், நாக்பூர், நொய்டா, கொல்கத்தா கெளவுகாத்தி மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் உள்ள இந்நிறுவனத்தின் கிளை அலுவலங்களில் பணிபுரிய ஆள் சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொறியியல் அலுவலர் - க்ரேட் 1, சயின்டிஃபிக் உதவியாளர், பொறியியல் உதவியாளர், டெக்னிசியன் உதவியாளர்,  உதவியாளர் க்ரேட் 2 ஆகிய பணிகளுக்கு மொத்தம் 99 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைன் தேர்வு, திறனறிவுத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகிய தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

71 ஆயிரம் பேருக்கு வேலை! பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி

கல்வித்தகுதி:

பொறியியல் அலுவலர் - க்ரேட் 1 பணிக்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஈசிஈ பிரிவில் பி.இ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் உதவியாளர் வேலைக்கு எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ படித்திருக்க வேண்டும். சயின்டிஃபிக் உதவியாளர் வேலைக்கு வேதியியல் பிரிவில்  இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். 

எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவராக இருந்தால் டெக்னிசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். BA / BSc. / B.Com / BBA / BBM / BCA ஆகிய ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் உதவியாளர் க்ரேட் 2 பணிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன் கம்ப்யூட்டரை நன்றாக பயன்படுத்தத் தெரிந்திருப்பதும் அவசியமாகும்.

CPRI Recruitment 2023: Apply for 99 posts, salary upto Rs 45K

வயது வரம்பு:

30 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் பொறியியல் அலுவலர் க்ரேட் 1 பணிக்கு முயற்சி செய்யலாம். மற்ற பணிகளுக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வயது வரம்பு தளர்வு அளிக்கபட்டுள்ளது. முழு விவரத்தை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் பணி நியமனம் வழங்கவேண்டும் - அண்ணாமலை கோரிக்கை

சம்பளம் எவ்வளவு?

பொறியியல் அலுவலர் க்ரேட் 1 - ரூ. 44,900 முதல்  ரூ. 1,42,400 வரை
சயின்டிஃபிக் உதவியாளர் - ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
பொறியியல் உதவியாளர் -ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை
டெக்னிசியன் - ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை
உதவியாளர் க்ரேட் 2 - ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரை

விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தின் https://cpri.res.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டும்தான் செலுத்த முடியும். ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும்.

மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பு பற்றிய விரிவான தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பைக் காணவும்.

https://cpri.res.in/sites/default/files/Advertisement%20CPRI.01.2023%20English.pdf

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.04.2023

ஒரே ஆண்டில் மொபைல் தயாரிப்பு துறையில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios