8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழக அரசு வேலைவாய்ப்பு.. சம்பளவு எவ்வளவு? முழு விவரம் இதோ..

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒன் ஸ்டாப் செண்டரில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Chennai One stop centre recruitment 2024 for various posts including case worker Rya

தமிழ்நாட்டில் சமூக துறையின் கீழ் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பிரிவின் ஒன் ஸ்டாப் செண்டர் இயங்கி வருகிறது. வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர உதவி வழங்கும் நோக்கத்தில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக இந்த ஒன் ஸ்டாப் செண்டரில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது தென் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒன் ஸ்டாப் செண்டரில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதன்படி Case worker பணிக்கு 3 பேர், Security பணிக்கு ஒருவர்,  Multi purpose helper பணிக்கு 2 பேர் என மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில்  Case worker பணிக்கு விண்ணப்பிப்போர் Social Worker பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு உளவியல் ஆலோசகர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா அமைப்பில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். உள்ளூரை சேர்ந்தவராகவும், வாகனம் ஓட்ட தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். Case worker பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ. 15000 மாதச்சம்பளம் வழங்கப்படும். 

செக்யூரிட்டி பணிக்கு ஆண் பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம். அரசு நிறுவனம் அல்லது தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி பணியாளராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். இவர்களுக்கு மாதச்சம்பளம் ரூ.10000 வழங்கப்படும்.
மல்டி பர்பஸ் ஹெல்பர் பதவிக்கு விண்ணப்பிப்போர் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இவர்களுக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும்.

உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 
தகுதியும் ஆர்வமும் கொண்டவர்கள் இந்த பணிக்கு வரும் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://chennai.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய தகவல்களுடன் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சேர்த்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை – 600 00

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios