சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1000 மேனேஜர் காலிப்பணியிடங்கள்!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 1000 மேனேஜர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 1000 மேனேஜர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 15 ஜூலை 2023 ஆகும்.
காலிப்பணியிடங்கள் விவரம்
Manager Scale II (Mainstream) - 1000
கல்வித்தகுதி
** இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேறு ஏதேனும் உயர் படிப்பு படித்திருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
** CAIIB
** பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளில் அதிகாரியாக குறைந்தபட்சம் 3 வருட அனுபவம்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு: ரூ.1,33,100 லட்சம் வரை சம்பளம்!
வயது வரம்பு
அதிகபட்ச வயது 31.05.2023 தேதிப்படி, 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்
Gen/ OBC/ EWS - ரூ.850/-+GST
SC/ ST/ Female - ரூ.175/-+GST
PWD - ரூ.175/-+GST
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
15 ஜூலை 2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைன் தேர்வுக்கான தற்காலிக தேதி
2023 ஆகஸ்ட் மாதத்தின் 2வது/3வது வாரம்
தேர்வு செய்யப்படும் முறை
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தனிப்பட்ட நேர்காணல், ஆவண சரிபார்ப்பு
பணியிட விவரம்
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் தேவைக்கேற்ப இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், எந்த கிளைகளில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
அனைத்து விண்ணப்பதாரர்களும் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரப்பூர்வ இணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் இனையதளத்துக்கு செல்ல இங்கு க்ளிக் செய்யவும். பணியிடங்கள் தொடர்பான (Recruitment notification) கூடுதல் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.