BHEL, திருச்சியில் 400 பொறியியல் மற்றும் டிப்ளமோ காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் டிப்ளமோ நிலை பதவிகளில் மொத்தம் 400 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை பிப்ரவரி 1, 2025 முதல் தொடங்கப்பட்டுள்ளது, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28 ஆகும்.

கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வில் வேட்பாளர்களின் செயல்திறன் மற்றும் அதைத் தொடர்ந்து பொறியாளர் பயிற்சிப் பதவிகளுக்கான நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் மூலம் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கெமிக்கல் மற்றும் மெட்டலர்ஜி துறைகளில் பொறியாளர் (ET) மற்றும் மேற்பார்வையாளர் பயிற்சி (தொழில்நுட்பம்) பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கை நிறைய சம்பளம்.! இன்டர்வியூ முடிந்தவுடன் சவூதியில் வேலை - முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

BHEL அறிவிப்பு வெளியீட்டு தேதி ஜனவரி 23, 2025
ஆன்லைனில் விண்ணப்ப தேதி தொடக்கம் : பிப்ரவரி 1, 2025 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 28, 2025
தேர்வு தேதி ஏப்ரல் 11, 12 மற்றும் 13, 2025 (தற்காலிக தேதி)

BHEL காலியிடம் 2025

வேட்பாளர்கள் தங்கள் BHEL ஆட்சேர்ப்பு 2025 விண்ணப்பக் கட்டணத்தை www.careers.bhel.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் கட்டண நுழைவாயில் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். SC/ST/PWD/முன்னாள் ராணுவ வீரர்கள் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.. விண்ணப்பக் கட்டணம் ரூ.600, செயல்முறை கட்டணம் ரூ.400 ஆகும். எஸ்.சி.எஸ்.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. செயல்முறை கட்டணம் மட்டுமே உள்ளது.

கல்வித் தகுதி

கல்வித் தகுதியைப் பூர்த்தி செய்யும் வேட்பாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொறியாளர் பயிற்சிப் பதவிகளுக்கு, வேட்பாளர்கள் B.tech/B.E. முடித்திருக்க வேண்டும், அதே நேரத்தில் மேற்பார்வையாளர் பயிற்சிப் பிரிவு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் 

பொறியாளர் பயிற்சியாளர் : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட துறைகளில் பி.டெக்/பி.இ./ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை பட்டம்/இரட்டைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

மேற்பார்வையாளர் பயிற்சியாளர் ; விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் குறிப்பிட்ட துறைகளில் டிப்ளமோ படிப்பை குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான CGPA-வை அனைத்து ஆண்டுகள்/செமஸ்டர்களிலும் (SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 60% வரை தளர்வு) பெற்றிருக்க வேண்டும்.

மாதம் ரூ.1,40,000 வரை சம்பளம்; இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு அடித்த ஜாக்பாட்

வயது வரம்பு

BHEL ஆட்சேர்ப்பு 2025க்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள் ஆகும். இந்த வயது வரம்புக்குள் வருபவர்கள் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். 

சம்பளம் : 

பொறியாளர் பயிற்சியாளர் : பயிற்சி காலத்தின் போது ரூ. 50,000/- முதல் 1,60,000/ சம்பளம் வழங்கபப்டும். சம்பளத்திற்கு பிறகு ரூ. 60,000/- முதல் ரூ. 1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

சூப்பர்வைசர் பயிற்சியாளர் : பயிற்சி காலத்தின் போது ரூ. 32,000/- முதல் ரூ. 1,00,000 சம்பளம் வழங்கப்படும், பயிற்சி காலத்தின் போதுரூ. 33,500/- முதல் ரூ. 1,20,000/- வரை வழங்கப்படும்.