பி.இ. படித்தவர்களுக்கு மத்திய அரசின் பெல் இந்தியா நிறுவனத்தில் சூப்பர் வேலை!

பெல் இந்தியா (BEL India) நிறுவனத்தில் 232 புரபேஷனரி ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

BEL Recruitment 2023: Apply for 232 Probationary Engineer and other posts at bel-india.in sgb

பெல் இந்தியா (BEL India) நிறுவனத்தில் 232 புரபேஷனரி ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 28ஆம் தேதி க்குள் விண்ணப்பிக்கலாம்.

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்றது. இந்த நிறுவனம் துணை மேலாளர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை நேரடி நியமன முறையில் தேர்வு செய்ய உள்ளது. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க 01.09.2023 அன்று 25 வயதுக்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு கொடுக்கப்படுகிறது.

உள்ளூரிலேயே கை நிறைய சம்பாதிக்கலாம்! பெண்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

BEL Recruitment 2023: Apply for 232 Probationary Engineer and other posts at bel-india.in sgb

Probationary Engineer:

எலெக்ட்ரானிக்ஸ் அன்டு கம்யூனிகேஷன் பிரிவில் 124, மெக்கானிக்கல் பிரிவில் 63, கம்ப்யூட்டர் சையின் பிரிவில் 18 என மொத்தம் 205 இடங்கள் காலியாக உள்ளன. B.E / B.Tech / B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு 12 முதல் 12.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

Probationary Officer (HR):

இந்தப் பணியில் 12 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. MBA / MSW / PG Degree / PG Diploma முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கும் ஆண்டுச் சம்பளம் 12 முதல் 12.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

Probationary Accounts Officer:

இதில் 15 காலிப் பணியிடங்களுக்கு CA அல்லது CMA படித்துவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த் வேலைக்கும் ஆண்டுக்கு ரூ. 12 முதல் 12.5 லட்சம் சம்பளம் கொடுக்கப்படும்.

ஓலா முதல் பஜாஜ் வரை... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க எக்கச்செக்க சாய்ஸ் இருக்கு! எது பெஸ்டு?

விண்ணப்பிப்பது எப்படி?:

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வும் நேர்முகத் தேர்வும் நடைபெறும். அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு பென் இந்தியா நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2023

விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பக் கட்டணமாக ரூ.1180 வசூலிக்கப்படும். ஆனால், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இந்த வேலைவாய்ப்ப பற்றி மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம். 

Bharat Electronics Limited Recruitment Notification: Probationary Engineer and other posts

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios