உள்ளூரிலேயே கை நிறைய சம்பாதிக்கலாம்! பெண்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

திருப்பூரில் உள்ள பெண்கள் உதவி மைய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tirupur Women Help Center recruitment on contract basis sgb

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் அவசர சேவைகளை வழங்குவதற்காக பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் பெண்கள் உதவி மையத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அதன் பகுதியாக ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) ஆகியவை பெண்கள் நலன் கருதி இயங்கி வருகின்றன.

இத்திட்டத்தில் மருத்துவ உதவி, சட்டம் மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனைகள் ஆகியவை அளிக்கப்படுகின்றன. பெண்கள் அனைவரும் பயனடையும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் திருப்பூரில் உள்ள அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப் பணியிடங்கள்:

உதவி மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர்,  பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் / ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

ரூ.52,000 சம்பளத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தகுதிகள்:

சோஷியல் ஒர்க் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் உதவி மைய நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்கலாம். அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டும். விண்ணப்பிப்பவர் உள்ளூரைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

பன்முக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருந்தால் போதும். சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 181 மற்றும் இதர உதவி எண்களில் வரும் அழைப்புகளை ஏற்று தேவையான உதவிகளைச் செய்யும் மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

Tirupur Women Help Center recruitment on contract basis sgb

சம்பளம்:

மைய நிர்வாகி பணிக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். மூத்த ஆலோசகர் பணிக்கு ரூ.20 ஆயிரமும், தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணிக்கு ரூ.18 ஆயிரமும் சம்பளமாகக் கொடுக்கப்படும். களப்பணியாளருக்கு ரூ.15 ஆயிரம், பல்நோக்கு உதவியாளருக்கு ரூ.6,400 ஊதியம் வழங்கப்படும். பாதுகாவலர் / ஓட்டுநர் பணிக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் தரப்படும்..

வயது வரம்பு:

உதவி மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர்,  பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் / ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலைகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

சமூகநல அலுவலர்,

அறை எண்,35,36 தரை தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

திருப்பூர்.

மின்னஞ்சல் முகவரி - chndswosouth@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15/10/2023

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து பார்க்கவும்.

https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/10/2023100384.pdf

டைப்பிங் தெரியுமா? சென்னையிலேயே சூப்பர் வேலை ரெடி! மத்திய அரசு பணிக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios