Avadi Heavy Vehicles Factory recruitment சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் ஜூனியர் மேனேஜர் பணிக்கு 20 காலியிடங்கள். தேர்வு இல்லை, மாதம் ரூ.30,000 சம்பளம்.
சென்னை, ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (Heavy Vehicles Factory - HVF) காலியாக உள்ள ஜூனியர் மேனேஜர் (Junior Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு எதுவும் இல்லாமல் நேர்காணல் மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம் மற்றும் கல்வித் தகுதி
ஜூனியர் மேனேஜர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, ஏதேனும் ஒரு பிரிவில் முதல் வகுப்பு பொறியியல் பட்டம் (Engineering Degree) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது, பி.இ/பி.டெக் அல்லாத வேறு ஏதேனும் ஒரு பிரிவில் முதல் வகுப்புப் பட்டம் மற்றும் 2 வருட எம்பிஏ (MBA) பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு, கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST, OBC, மற்றும் PwBD பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. விண்ணப்பக் கட்டணத்தைப் பொறுத்தவரை, பெண்கள் மற்றும் SC/ST/PwBD பிரிவினருக்கு கட்டணம் இல்லை. மற்றவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் அல்லாமல், விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 11, 2025.
