TNPSC Group 1: குரூப் 1 தேர்வு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. மறந்துடாதீங்க..!
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இன்று கடைசி நாளாகும்.
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இன்று கடைசி நாளாகும்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி இந்தாண்டு குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 21ம் தேதி வெளியிட்டது. அதாவது, துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 இடங்களில் என உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 92 காலி பணியிடங்கள் அதில் அடங்கும்.
இதையும் படிங்க;- விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.. டிஆர்பி நடத்தும் தேர்வில் புதிய மாற்றம்..
அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு இணையதளம்(www.tnpsc.gov.in) வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இதனால், குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று நள்ளிரவு 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் முதன்மை தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிடும்.
இதையும் படிங்க;- அரசு வங்கியில் எழுத்தர் பணி.. முதல்நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு.. பதவிறக்கம் செய்வது எப்படி..?