அரசு வங்கியில் எழுத்தர் பணி.. முதல்நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு.. பதவிறக்கம் செய்வது எப்படி..?

வரும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் ஐபிபிஎஸ் எழுத்தர் முதல்நிலை போட்டித் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம், பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 

IBPS clerk prelims exam 2022 - Admit card 2022 . direct link here

காலி பணியிடங்கள்: 

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பதவிகளுக்கு 6,035 காலிப்பணியிடங்கள் உள்ளன. 

அனுமதிச் சீட்டு: 

ஐபிபிஎஸ் எழுத்தர் பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை வெளியிடப்பட்டுள்ளது.

பதவிறக்கம் செய்வது எப்படி..?

1, ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் முதலில் செல்லவும்.

2, மேல் குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்ற பின்பு, “Click here to download online prelimnary Call letter for CRP CLERKS - XII” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3, அதனை கிளிக் செய்த பின்பு, ibpsonline.ibps.in என்ற இணையபக்கம் திறக்கும். அதில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/ கடவுச்  சொல்- பிறந்த தேதி ஆகிய விவரங்களை சமர்ப்பிக்கவும்.

4, அதுமட்டுமின்றி பதிவு எண்/கடவுச் சொல் மறந்துவிட்டால், விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு தங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை பார்த்து சரி செய்து கொள்ளலாம்.

5, இறுதியாக கணினித் திரையில் தோன்றும் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: 

முதலில் முதல்நிலைத் எழுத்து தேர்வு நடத்தப்படும். 

இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வு நடைபெறும். 

இந்த தேர்வு Problem Solving ability, Logical Reasoning, ஆங்கில மொழித்திறன் (English Language and Comprehension) ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டது.

தேர்வு நடைபெறும் தேதி: 

வரும் செப்டம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது. 

தமிழ், கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் தேர்வுகள் நடைபெறுகிறது. 

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் முதன்மை தேர்வு நடைபெறுகிறது. 

முக்கிய குறிப்பு: 

சென்னை கிண்டியில் உள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் 9597557913 என்ற வாட்ஸ் அப் (Whatspp) எண்ணிற்கு பெயர், கல்வித்தகுதி, முகவரி உள்ளிட்ட தகவல்களை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட் !! குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி.. நாளை முதல் தொடக்கம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்..?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios